படிப்பது இராமாயணம்! இடிப்பது பெருமாள் கோயில்!
நன்றி : போர்வாள்24-05-1952 (சனிக்கிழமை)
இக்கட்டுரை, 1952-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இராஜாஜி (ஆச்சாரியார்) அவர்கள், 'போரா' சமூக இஸ்லாமிய வணிகர்களின் மாநாட்டில் ஆற்றிய உரையைக் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஒரு அரசியல் சாடலாகும். "இஸ்லாமியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது; வாணிபத்தை மட்டும் கவனிக்க வேண்டும்" என்றும், "ஒவ்வொருவரும் அவரவர் மதக் கோட்பாடுகளின்படி வாழ வேண்டும்" என்றும் ஆச்சாரியார் அறிவுரை வழங்கியதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.- பிச்சை எடுப்பவன் பிறரை நோக்கிப் பிச்சை எடுக்காதே என்று கூறுவது போலவும், திருடன் பிறருக்குத் திருடாதே என உபதேசம் செய்வது போலவும், தன் வாழ்நாள் முழுவதும் (சுமார் 40 ஆண்டுகள்) அரசியலிலேயே கழித்து, பல்வேறு பதவிகளை அனுபவித்த ஆச்சாரியார், பிறரை அரசியலுக்கு வர வேண்டாம் எனக் கூறுவது போலியானது.
- அரசியல் என்பது தங்களுக்கு மட்டுமே உரிய ஏகபோக உரிமை என்ற எண்ணத்திலும், பிற சாதி/மதத்தினர் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கிலுமே இத்தகைய போதனைகள் செய்யப்படுகின்றன.
- "மதக் கட்டளைகளை மீறக் கூடாது" என்று போதிக்கும் ஆச்சாரியார், பிராமண சமூகத்திற்கு இந்து மதம் விதித்துள்ள துறவறம், கடலைக் கடக்கக் கூடாது போன்ற விதிகளை அவரோ அல்லது அவர் சார்ந்த சமூகத்தினரோ பின்பற்றுவதில்லை; மாறாக, அவர்கள் அரசு உயர் பதவிகளிலும் வணிகத்திலும் (உணவகங்கள் நடத்துதல்) ஈடுபட்டு வழிகாட்டுதல்களை மீறுகின்றனர் என்று கட்டுரை சாடுகிறது.
"பிச்சையெடுப்பது மகா பாவம்! தயவு செய்து நீங்கள் யாரும் பிச்சையெடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள் — அது மகா கெட்ட வழக்கம்!" — தன்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் நான்கைந்து பேரைப் பார்த்து நாராயணசாமி இதுபோலக் கூறுகிறான். அவன் இப்படிக் கூறியதுதான் தாமதம், அந்த நான்கைந்து பேரும் வெடி வெடித்ததுபோலச் சிரிக்கிறார்கள். "ஏனப்பா சிரிக்கிறீர்கள்?" என்று கேட்கிறான் நாராயணசாமி. "ஏனா? தெரியவில்லையா உனக்கு?" என்று கேட்டுவிட்டு, நாராயணசாமியின் கையிலிருக்கும் பாத்திரத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அந்த நான்கைந்து பேரும்! நாராயணனின் கையிலிருப்பது ஒரு பிச்சைக் கிண்ணி! ஆம்! பிச்சையெடுப்பதையே தன்னுடைய பரம்பரைத் தொழிலாகக் கொண்டவன் நாராயணன்! அவன் கூறுகிறான் மற்றவர்களைப் பார்த்து, பிச்சையெடுப்பது மகா பாவம், தயவு செய்து யாரும் பிச்சையெடுக்க முன்வராதீர்கள் என்று! சிரிக்காமலா இருப்பார்கள் மற்றவர்கள்? வீதி வழியே வேகமாகப் போய்க்கொண்டிருந்த வரதப்பனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் கந்தப்பன். "என்னப்பா கந்தப்பா, ஏண்டாப்பா என்னை நிறுத்தினாய்?" என்று கேட்டான் வரதப்பன். "ஒன்றுமில்லை வரதர்! உனக்கொரு வார்த்தை! திருட்டுத் தொழில் மிகமிக அக்கிரமமான தொழில். அது பஞ்சமா பாதகங்களில் ஒன்று. வேறு எந்தக் குற்றத்தைப் புரிந்தாலும் புரியலாம், ஆனால் திருட்டுக் குற்றம் ஒன்றை மட்டும் புரியக்கூடாது" என்று வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போனான் கந்தப்பன். வரதப்பனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை — திருட்டுத் தொழிலிலே முதல் பரிசு பெற்றவன் கந்தப்பன். திருடர்கள் உலகிலேயே கந்தப்பனுக்கு ஒரு தனி மதிப்பு, புகழ், செல்வாக்கு உண்டு. அவ்வளவு பிரபலமான திருடன் அவன். அவன் கூறுகிறான் வரதனைப் பார்த்து, திருடுவது பெருங்குற்றம் என்று! "வழக்கறிஞராக இருக்கலாம், இஞ்சினீயராக இருக்கலாம், வியாபாரியாக உலவலாம், மளிகைக் கடை வைக்கலாம், வேறு எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் டாக்டர் தொழில்! அந்தத் தொழில் மட்டும் இறங்கிவிடக்கூடாது. விஷயம் தெரியாதவர்கள்! ஈவு இரக்கம், மனிதப் பண்பு, ஜீவகாருண்யம், பரிவு பச்சாத்தாபம் இவைகளுக்கெல்லாம் துளியும் இடமில்லாத தொழில் அது! துளியும் இடமில்லாத தொழில்!" — திருவாளர் திகம்பரசாமி இப்படிச் சொற்பொழிவாற்றினார் மக்கள் முன்னேற்ற மன்றத்தில்! திரண்டு குழுமியிருந்த மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. திகம்பரசாமியார் இப்படிப் பேசுகிறார் என்று ஆச்சரியத்தால் அசைபாறாச் சிலைகளாகிவிட்டனர் அத்தனை பேரும். இயற்கைதானே! திருவாளர் திகம்பரசாமி பேரும் புகழும் பெற்ற பிரபலமான டாக்டர்! அத்தகையவர் மற்றவர்களைப் பார்த்து, டாக்டர் தொழிலுக்கு வராதீர்கள், அது ஈவு இரக்கமற்ற தொழில் என்று கூறுவாரானால், ஆச்சரியம் மற்றவர்களுக்கு ஏற்படாமலா இருக்கும்? "வழக்கறிஞராக வாழ்வதை விட ஒருவன் கள்ளமார்க்கெட் காதகனாக உலவலாம். வழக்கறிஞன் தொழில் அவ்வளவு பாபகரமானது, தவறானது, பிழைபல மலிந்தது" என்னும் கருத்தை விளக்கி நீண்டதோர் கட்டுரை வெளியாகியிருந்தது வார இதழ் "வெள்ளி வீதி"யில்! "வெள்ளி வீதி"யைப் படிக்க நேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரிப்பு ஒரு புறம் — வியப்பு மற்றொரு புறம். ஏனெனில் அந்தக் கட்டுரையைத் தீட்டியிருப்பவரின் பெயர் வழக்கறிஞர் வரதராஜ அய்யங்கார் எம்.ஏ. பி.எல். சிரிப்பும் வியப்பும் தோன்றாமலா இருக்கும் வாசகர்களுக்கு? வக்கீல் தொழிலிலே மாதம் ஆயிரம் இரண்டாயிரம் என்று பணம் திரட்டும் பேராற்றல் படைத்த வரதராஜ அய்யங்கார், அந்தத் தொழிலிலே நுழையாதீர்கள், அது மிக மிக அநீதி நிரம்பிய தொழில் என்று ஏனைய மக்களுக்கெல்லாம் எழில்பட எடுத்துக் கூறுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய தொழிலை உதறித் தள்ளிவிட்டு, அதற்கு அப்புறம், "அந்தந்தத் தொழில் மிகவும் அக்கிரமமானது — ஆகவே அந்தத் தொழில்களை யாரும் மேற்கொள்ளாதீர்கள்" என்று கூறியிருப்பார்களானால் அப்படிக் கூறுவதிலே நாணயம் இருந்திருக்கும். ஆனால் இவர்களோ தத்தமது தொழிலை விடாமல் புரிந்து கொண்டே, "அந்தத் தொழில் மகா பாவமானது! — ஆகவே யாரும் அந்தத் தொழிலை மேற்கொள்ளாதீர்கள்!" என்று ஊருக்கு உபதேசம் புரியும் உத்தமர்களாகக் காட்சி அளிக்கிறார்கள். நாணயம் இல்லாதவர்கள், பித்தலாட்டக்காரர்கள், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் உலுத்தர்கள், ஊருக்கு உபதேசிகள், தனக்கொரு நியாயம் பிறருக்கொரு நியாயம் பேசும் அக்கிரமக்காரர்கள். இந்த வாசகங்களிலே எதை வேண்டுமானாலும் கூறலாம் இவர்கள் சம்பந்தமாக; எதைக் கூறினாலும் இவர்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகக் கொலுவீற்றிருக்கிறாரல்லவா பூசுரர் தலைவர் ஆச்சாரியார், அவர் இந்தத் திங்கள் பத்தாம் நாள், சென்னையில், தன் முத்தான வாய் திறந்து ஒரு மோகனமயமான சொற்பொழிவை ஆற்றியிருக்கிறார். அந்தச் சொற்பொழிவை நாளிதழ்களில் கண்டதும் நமக்கு, பிச்சைத் தொழில் நாராயணன், கன்னக்கோல் கந்தப்பன், பிரபல டாக்டர் திகம்பரசாமி, வழக்கறிஞர் வரதராஜ அய்யங்கார் ஆகிய இவர்களின் நினைவுதான் மேலோங்கி எழும்பலாயிற்று. போரா வகுப்பு என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளில் ஒன்று. அந்தப் போரா வகுப்பைச் சேர்ந்த மக்கள் சென்னை நகரில் மட்டும் சுமார் ஆயிரத்து இருநூறு பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் வணிகர்கள். அவர்களிலே பல சிறந்த வழக்கறிஞர்கள், டாக்டர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். போரா சமுதாயத்தவர்கள் அத்தனை பேரும் ஆழ்ந்த மதப்பற்று உடையவர்கள்; அரசியல் துறையிலே பெரும்பாலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. இப்படிப்பட்ட நிலையும் நினைப்பும் படைத்த போரா சமுதாயத்தவர்கள், இம் மாதம் பத்தாம் தேதியன்று, அவர்களுடைய குலகுருவுக்குச் சென்னையில் ஒரு தேநீர் விருந்தை அளித்திருக்கிறார்கள். அந்தத் தேநீர் விருந்திலே அன்பர் ஆச்சாரியாரும் கலந்துகொண்டு விருந்தை அருந்திய பிறகு விரிவுரை ஒன்றும் ஆற்றியிருக்கிறார். அந்த விரிவுரையைக் கண்டபோதுதான் நம் மனக்கண்முன்னால் கன்னக்கோல் கந்தப்பனும், வக்கீல் தொழில் வரதராஜ அய்யங்காரும், பிச்சையெடுக்கும் நாராயணசாமியும், பிரபல டாக்டர் திகம்பரசாமியும் தோன்றலாயினர். "போரா வகுப்பைச் சேர்ந்த நீங்கள் பிரபல வணிகர்களாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் உங்களுடைய வாணிபத்தைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டுமென்பதே என்னுடைய ஆசை. நீங்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டாம். அது உங்களுக்கு அவசியமில்லை" — துள்ளியோடும் புள்ளிமான்களை வேட்டையாடிக் கொன்று தின்றுவிட்டு, புலி ஜீவகாருண்யம் பேசினால் அந்தப் பேச்சை ஆச்சாரியார் பேச்சுக்கு ஒப்பிடலாம்! அறிவுரை கூறியிருக்கிறார் போரா வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு. தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அரசியலிலேயே கழித்துவிட்டவர் ஆச்சாரியார். வயது எழுபதுக்குமேல் ஓடியும் கூட அரசியலை விட்டுத் துறக்க மனமில்லாமல் அரசியல் வட்டாரத்துக்குள்ளேயே வளைய வளைய வந்துகொண்டிருப்பவர் ஆச்சாரியார். கவர்னர் ஜெனரல் என்கிற மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர்கள் அப்படி இருந்தபிறகு எத்தகைய அரசியலிலும் நுழையக்கூடாது என்கிற அரசியல் சம்பிரதாயத்தையும் மீறி, வேண்டுமென்றே அரசியலில் மீண்டும் நுழைந்து சித்துகள் பலவற்றை விளையாடி வரும் விசித்திரபுருஷர் ஆச்சாரியார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகத் தன்னுடைய உள்ளத்தை, உணர்ச்சிகளை, அறிவை, திறமையை, அத்தனையையும் அரசியல் உலகுக்கே அர்ப்பணித்துவிட்டவர் ஆச்சாரியார். அரசியல் உலகில் நெடுங்காலமாகப் பவணி வந்துகொண்டிருப்பவர் மட்டுமல்லர் அவர், அரசியல் உலகில் உலவுவதால் என்னென்ன ருசியையும் பசையையும் காண இயலுமோ அவ்வளவையும் அனுபவித்து முதிர்ந்த அரசியல் பழம் ஆச்சாரியார். வெள்ளை ஏகாதிபத்ய எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் பூமாலை, பாராட்டு, புகழ், செல்வாக்கு இவ்வளவும் கிடைத்தன அவருக்கு. சுயராஜ்ய தர்பார் நடைபெற்று வரும் இந்தக் காலத்திலோ, மத்திய சர்க்காரில் இரண்டு முறை மந்திரிப்பதவி, வங்காள மாகாணத்தில் ஒருமுறை கவர்னர் பதவி, அகில இந்தியாவுக்கும் ஒரு முறை கவர்னர் ஜெனரல் பதவி, கடைசியாக இப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவி ஆகிய இவ்வளவு இலாபங்களும் கிடைத்திருக்கின்றன அன்பர் ஆச்சாரியாருக்கு. பட்டம், பதவி, புகழ், பணம், வசதிகள் நிரம்பிய வாழ்க்கை ஆகிய இவைகளிலே ஏதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றை மட்டுமோ அல்லது எல்லாவற்றையுமோ பெறவேண்டுமென்பதுதான் எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடிய மிக அதிகமான ஆசையாக இருக்கமுடியும். ஆச்சாரியார் இவை அத்தனையையும் பெற்றிருக்கிறார் — அவர் நம் அரசியல்வாதியாக இருந்துவரும் காரணத்தால்! சென்ற நாற்பது ஆண்டுகளாக அரசியலிலே ஈடுபட்டு, அப்படி ஈடுபட்ட காரணத்தால் பெயரும் புகழும் பட்டமும் பதவியும் வேண்டியமட்டும் பெற்று அநுபவித்த ஆச்சாரியார், மற்ற மனிதர்களைப் பார்த்து, "அரசியலில் ஈடுபடாதீர்கள் — அது தேவையில்லாத காரியம்" என்று கூறுகிறார். இது நாணயமான பேச்சாக இருக்க முடியுமா? நேர்மையுள்ள பேச்சாக எடுத்துக்கொள்ள முடியுமா நாம்? அரசியல் என்பது உண்மையிலேயே நாட்டுக்குத் தேவையில்லாத ஒரு துறை என்பது ஆச்சாரியாரின் எண்ணமாக இருக்குமானால், அவர் ஏன் இன்னமும் அரசியல் உலகிலேயே உழன்றுகொண்டிருக்கிறார்? அவர் அரசியல் உலகிலிருந்து வெளியேறிவிட்டு, அரசியல் துறைக்கே ஒரு கடைசி விடை கொடுத்துவிட்டு, அதற்கு அப்புறம், "அரசியல் என்பது தேவையற்ற ஒரு காரியம்" என்று பேசுவாரானால், அந்தப் பேச்சிலே நாணயம் இருக்க முடியும். ஆனால் இப்போதோ அவர் ஓர் அதிதீவிர அரசியல்வாதியாக இருந்துவருகிறார். இப்படி இருந்துகொண்டே அவர் "அரசியல் என்பது தேவையற்ற காரியம்" என்று வாய்கூசாமல் கூறுகிறார். பிச்சைக் கிண்ணியைக் கையிலேந்திக்கொண்டே நாராயணசாமி மற்றவர்களைப் பார்த்துப் பிச்சையெடுப்பது மகா பாவம் என்று கூறியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? டாக்டர் தொழில்மூலம் ஏராளமாகப் பணம் சேர்த்து வரும் திகம்பரசாமி, அப்படிப் பணம் சேர்த்துவரும் காரியத்தைச் சிறிதளவுகூட தளர்த்தாமலே "டாக்டர் தொழிலா — ஐயையோ அது அக்கிரமமான தொழிலாயிற்றே" என்று அலறுவதற்கும், ஆச்சாரியாரின் பேச்சுக்கும் என்ன மாறுபாடு இருக்கிறது? பிச்சைக்கார நாராயணன், கன்னக்கோல் கந்தப்பன், பிரபல டாக்டர் திகம்பரசாமி, வழக்கறிஞர் வரதராஜர் இவர்களுடைய நிலையிலேதான் ஆச்சாரியார் இருக்கிறார் என்று நாம் கூறினால் ஆச்சாரியார் நம்முடன் சண்டைக்கு வரக்கூடும். ஆகவே ஆச்சாரியாரே கூறட்டும் — அவருடைய பேச்சு மேலே நாம் குறிப்பிட்டுள்ள இவர்களுடைய பேச்சுக்களைப் போலவே இருக்கின்றதா, இல்லையா? என்ன அர்த்தம் ஆச்சாரியாருடைய பேச்சுக்கு? அரசியல் என்பது எனக்கு மட்டும்தான் சொந்தம், உங்களுக்கெல்லாம் அதிலே பங்கில்லை என்று அர்த்தமா? அரசியல் உலகிலே கிடைக்கக்கூடிய பட்டம், பதவி முதலிய இலாபங்களையெல்லாம் நானேதான் அனுபவித்தாக வேண்டும், வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்று அர்த்தமா? அரசியல் என்பது ஆச்சாரியாருடைய வர்க்கத்துக்கு மட்டும்தான் ஏகபோக உரிமை, இஸ்லாமிய இனத்தவருக்கு அந்த உரிமை இல்லை என்று அர்த்தமா? எந்த அர்த்தத்திலே ஆச்சாரியார், இஸ்லாமிய இனத்தவர்களைப் பார்த்து "நீங்களெல்லாம் அரசியலில் நுழையக்கூடாது" என்று கூறியிருக்கிறார்? எந்தப் பொருளிலே ஆச்சாரியார் அன்றையதினம் சொற்பொழிவாற்றியிருந்தாலும் சரி, அவருடைய பேச்சை நாணயமானது என்று யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். "ஒவ்வொரு மதமும் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று சிற்சில கோட்பாடுகளை வகுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் மக்கள் அப்படியே பின்பற்றி நடப்பார்களானால் அந்தந்த சமூகம் மட்டுமல்ல, நாடு பூராவுமே சந்தோஷமாக வாழமுடியும். ஆனால் சில மக்கள் அவரவர்களுடைய மதம் வகுத்துள்ள முறைப்படி நடந்துகொள்வதில்லை. அதனால்தான் உலகில் பற்பல சிக்கல்களும் உண்டாயிருக்கின்றன" — அதே கூட்டத்தில் ஆச்சாரியார் நமக்கெல்லாம் அளித்திருக்கிற மற்றொரு அறிவுரை இது!ஒவ்வொரு மனிதனும் தன் தன் மதம் விதித்துள்ள கட்டளைப்படியேதான் காரியமாற்ற வேண்டுமாம்! அப்படிக் காரியமாற்றாத காரணத்தால்தான் உலகிலே இன்றையதினம் பற்பல சிக்கல்களும் ஏற்பட்டுவிட்டனவாம்! கூறுகிறார் ஆச்சாரியார் இப்படியெல்லாம்! அப்படியானால் ஆச்சாரியார் மட்டும் ஏன், இந்துமதம் அவருக்கும் அவருடைய இனத்தவருக்கும் விதித்துள்ள கட்டளையை மீறி நடந்துவருகிறார்?வேதம் ஓதுவது, பஜகோவிந்தம் பாடுவது, ஆண்டவனை வழிபடுவது, யாகம் நடத்துவது, கடுந்தவம் புரிவது, கானகத்தில் வாழ்வது, உலக பந்தங்களை வெறுப்பது, முழுத்துறவியாக வாழ்வது, லௌகீக விவகாரங்களில் மனத்தைப் பறிகொடாமல் ஒவ்வொரு விநாடியையும் ஆண்டவனைப் பற்றிய நினைப்பிலேயே செலவழிப்பது — இதுதானே இந்துமதம் பிராமண இனத்தவருக்கென்று வகுத்துக் கொடுத்துள்ள பாதை? ஆச்சாரியார் இந்தப் பாதை வழியாகவா நடந்து வருகிறார்? கவர்னராகவும், கவர்னர் ஜெனரலாகவும், மத்திய மந்திரியாகவும், மாகாணப் பிரதமராகவுமல்லவா தன்னுடைய வாழ்நாளை வீண் நாளாக்கி வருகிறார்? "உலக விவகாரங்களில் ஈடுபடாதே — ஆண்டவனைப் பற்றியே விநாடிதோறும் எண்ணமிடு" — இந்து மதம் இப்படிக் கட்டளையிடுகிறது ஆச்சாரியாருக்கு. ஆனால் ஆச்சாரியாரோ ஓயாமல் உலக விவகாரங்களில்தான் ஈடுபட்டுவருகிறார். இன்றைய தினம் வரையில்கூட அவர், திரு ஓடு ஏந்திக்கொண்டு, திருக்காஷாயம் தரித்துக்கொண்டு, சந்நியாசகோலம் பூண்டதாகத் தெரியவில்லை. இவர் மட்டும் மதக் கட்டளையை மீறலாம், மற்றவர்கள் தான் மீறக்கூடாதா?இவர், தன்னுடைய மதக்கட்டளையை மீறுவதால் உலகத்தில் சிக்கல் எதுவும் ஏற்பட்டுவிடாது, மற்றவர்கள் மீறினால்தான் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? மதக் கட்டளைப்படி நடவுங்கள், அப்படி நடந்தால்தான் உலகில் ஆநந்தம் அரசோச்சும் என்று இஸ்லாமியர்களைப் பார்த்து அறிவுரை கூறுகிறாரே ஆச்சாரியார், அதே அறிவுரையை ஏன் அவர் பிராமண இனத்தவரைப் பார்த்துக் கூறவில்லை? உணவுப் பொருளை விலைக்கு விற்பது மகா பாவம் என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் பிராமணத் தோழர்களோ ஊருக்கு ஊர் 'ஓட்டல்' வைத்து நடத்துகிறார்கள். அதாவது மதக் கட்டளையை மீறுகிறார்கள். ஏன் இதைக் கண்டிக்கவில்லை ஆச்சாரியார்? இஸ்லாமிய இனத்தவருக்கு ஒரு நீதி, இவருடைய இனத்தவருக்கு மற்றொரு நீதியா?- ராஜிய விவகாரங்களில் நுழையாதீங்கோ!
- மதம் இடுகின்ற கட்டளைப்படி வாழ்க்கையை நடத்துங்கோ!
மற்றவர்களுக்குக் கூறுகிறார் ஆச்சாரியார் இந்த இரட்டை உபதேசத்தை! ஆனால் இவரோ இந்த உபதேசத்திற்கு நேர்மாறாக நடந்து வருகிறார். நியாயமா?படிப்பது இராமாயணம் — இடிப்பது பெருமாள் கோயிலையா? பேசுவது ஜீவகாருண்யம் — உண்பது கெண்டை மீனையா? நடிப்பது அஹிம்சாவாதியாக — நடத்துவது தடியடி தர்பாரா? ஒரு மாகாணத்தின் பிரதமர் என்கிற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி ஊருக்கு உபதேசியாக இருக்கலாமா, இருக்கலாமா?"கடலைத் தாண்டாதே — தாண்டுவது குற்றம்!" என்கிறது இந்துமதம். ஆனால் பிராமண இனத்தவரிலோ பலர், பற்பலர், இலண்டன் சென்று, ஐ.சி.எஸ். பட்டம் பெற்று, இங்கே திரும்பிவந்து கலெக்டர்களாகவும் சர்க்கார் அதிகாரிகளாகவும் கொலுவீற்றிருக்கின்றனர். இதை ஏன் இன்றளவும் எதிர்த்துப் பேசிக் குற்றம் கூறவில்லை ஆச்சாரியார்?உலக பந்தயங்களை விடு! காவி காஷாயத்தைக் கையிலெடு! என்கிறது இந்து மதம். ஆனால் பிராமண இனத்தவரோ, சந்நியாச கோலமா — சீ — அதை விடு, கோட்டும் சூட்டும் கையிலெடு என்று கூறிவருகின்றனர். ஏன் இதை மகாபாவமான நடத்தை என்று கண்டிக்கவில்லை ஆச்சாரியார்?
"பிச்சையெடுப்பது மகா பாவம்! தயவு செய்து நீங்கள் யாரும் பிச்சையெடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள் — அது மகா கெட்ட வழக்கம்!" — தன்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் நான்கைந்து பேரைப் பார்த்து நாராயணசாமி இதுபோலக் கூறுகிறான். அவன் இப்படிக் கூறியதுதான் தாமதம், அந்த நான்கைந்து பேரும் வெடி வெடித்ததுபோலச் சிரிக்கிறார்கள்.
"ஏனப்பா சிரிக்கிறீர்கள்?" என்று கேட்கிறான் நாராயணசாமி. "ஏனா? தெரியவில்லையா உனக்கு?" என்று கேட்டுவிட்டு, நாராயணசாமியின் கையிலிருக்கும் பாத்திரத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அந்த நான்கைந்து பேரும்! நாராயணனின் கையிலிருப்பது ஒரு பிச்சைக் கிண்ணி! ஆம்! பிச்சையெடுப்பதையே தன்னுடைய பரம்பரைத் தொழிலாகக் கொண்டவன் நாராயணன்! அவன் கூறுகிறான் மற்றவர்களைப் பார்த்து, பிச்சையெடுப்பது மகா பாவம், தயவு செய்து யாரும் பிச்சையெடுக்க முன்வராதீர்கள் என்று! சிரிக்காமலா இருப்பார்கள் மற்றவர்கள்?
வீதி வழியே வேகமாகப் போய்க்கொண்டிருந்த வரதப்பனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் கந்தப்பன். "என்னப்பா கந்தப்பா, ஏண்டாப்பா என்னை நிறுத்தினாய்?" என்று கேட்டான் வரதப்பன். "ஒன்றுமில்லை வரதர்! உனக்கொரு வார்த்தை! திருட்டுத் தொழில் மிகமிக அக்கிரமமான தொழில். அது பஞ்சமா பாதகங்களில் ஒன்று. வேறு எந்தக் குற்றத்தைப் புரிந்தாலும் புரியலாம், ஆனால் திருட்டுக் குற்றம் ஒன்றை மட்டும் புரியக்கூடாது" என்று வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போனான் கந்தப்பன்.
வரதப்பனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை — திருட்டுத் தொழிலிலே முதல் பரிசு பெற்றவன் கந்தப்பன். திருடர்கள் உலகிலேயே கந்தப்பனுக்கு ஒரு தனி மதிப்பு, புகழ், செல்வாக்கு உண்டு. அவ்வளவு பிரபலமான திருடன் அவன். அவன் கூறுகிறான் வரதனைப் பார்த்து, திருடுவது பெருங்குற்றம் என்று!
"வழக்கறிஞராக இருக்கலாம், இஞ்சினீயராக இருக்கலாம், வியாபாரியாக உலவலாம், மளிகைக் கடை வைக்கலாம், வேறு எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் டாக்டர் தொழில்! அந்தத் தொழில் மட்டும் இறங்கிவிடக்கூடாது. விஷயம் தெரியாதவர்கள்! ஈவு இரக்கம், மனிதப் பண்பு, ஜீவகாருண்யம், பரிவு பச்சாத்தாபம் இவைகளுக்கெல்லாம் துளியும் இடமில்லாத தொழில் அது! துளியும் இடமில்லாத தொழில்!" — திருவாளர் திகம்பரசாமி இப்படிச் சொற்பொழிவாற்றினார் மக்கள் முன்னேற்ற மன்றத்தில்!
திரண்டு குழுமியிருந்த மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. திகம்பரசாமியார் இப்படிப் பேசுகிறார் என்று ஆச்சரியத்தால் அசைபாறாச் சிலைகளாகிவிட்டனர் அத்தனை பேரும். இயற்கைதானே! திருவாளர் திகம்பரசாமி பேரும் புகழும் பெற்ற பிரபலமான டாக்டர்! அத்தகையவர் மற்றவர்களைப் பார்த்து, டாக்டர் தொழிலுக்கு வராதீர்கள், அது ஈவு இரக்கமற்ற தொழில் என்று கூறுவாரானால், ஆச்சரியம் மற்றவர்களுக்கு ஏற்படாமலா இருக்கும்?
"வழக்கறிஞராக வாழ்வதை விட ஒருவன் கள்ளமார்க்கெட் காதகனாக உலவலாம். வழக்கறிஞன் தொழில் அவ்வளவு பாபகரமானது, தவறானது, பிழைபல மலிந்தது" என்னும் கருத்தை விளக்கி நீண்டதோர் கட்டுரை வெளியாகியிருந்தது வார இதழ் "வெள்ளி வீதி"யில்! "வெள்ளி வீதி"யைப் படிக்க நேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரிப்பு ஒரு புறம் — வியப்பு மற்றொரு புறம். ஏனெனில் அந்தக் கட்டுரையைத் தீட்டியிருப்பவரின் பெயர் வழக்கறிஞர் வரதராஜ அய்யங்கார் எம்.ஏ. பி.எல். சிரிப்பும் வியப்பும் தோன்றாமலா இருக்கும் வாசகர்களுக்கு? வக்கீல் தொழிலிலே மாதம் ஆயிரம் இரண்டாயிரம் என்று பணம் திரட்டும் பேராற்றல் படைத்த வரதராஜ அய்யங்கார், அந்தத் தொழிலிலே நுழையாதீர்கள், அது மிக மிக அநீதி நிரம்பிய தொழில் என்று ஏனைய மக்களுக்கெல்லாம் எழில்பட எடுத்துக் கூறுகிறார்.
இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய தொழிலை உதறித் தள்ளிவிட்டு, அதற்கு அப்புறம், "அந்தந்தத் தொழில் மிகவும் அக்கிரமமானது — ஆகவே அந்தத் தொழில்களை யாரும் மேற்கொள்ளாதீர்கள்" என்று கூறியிருப்பார்களானால் அப்படிக் கூறுவதிலே நாணயம் இருந்திருக்கும். ஆனால் இவர்களோ தத்தமது தொழிலை விடாமல் புரிந்து கொண்டே, "அந்தத் தொழில் மகா பாவமானது! — ஆகவே யாரும் அந்தத் தொழிலை மேற்கொள்ளாதீர்கள்!" என்று ஊருக்கு உபதேசம் புரியும் உத்தமர்களாகக் காட்சி அளிக்கிறார்கள். நாணயம் இல்லாதவர்கள், பித்தலாட்டக்காரர்கள், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் உலுத்தர்கள், ஊருக்கு உபதேசிகள், தனக்கொரு நியாயம் பிறருக்கொரு நியாயம் பேசும் அக்கிரமக்காரர்கள். இந்த வாசகங்களிலே எதை வேண்டுமானாலும் கூறலாம் இவர்கள் சம்பந்தமாக; எதைக் கூறினாலும் இவர்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும்.
சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகக் கொலுவீற்றிருக்கிறாரல்லவா பூசுரர் தலைவர் ஆச்சாரியார், அவர் இந்தத் திங்கள் பத்தாம் நாள், சென்னையில், தன் முத்தான வாய் திறந்து ஒரு மோகனமயமான சொற்பொழிவை ஆற்றியிருக்கிறார். அந்தச் சொற்பொழிவை நாளிதழ்களில் கண்டதும் நமக்கு, பிச்சைத் தொழில் நாராயணன், கன்னக்கோல் கந்தப்பன், பிரபல டாக்டர் திகம்பரசாமி, வழக்கறிஞர் வரதராஜ அய்யங்கார் ஆகிய இவர்களின் நினைவுதான் மேலோங்கி எழும்பலாயிற்று.
போரா வகுப்பு என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளில் ஒன்று. அந்தப் போரா வகுப்பைச் சேர்ந்த மக்கள் சென்னை நகரில் மட்டும் சுமார் ஆயிரத்து இருநூறு பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் வணிகர்கள். அவர்களிலே பல சிறந்த வழக்கறிஞர்கள், டாக்டர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். போரா சமுதாயத்தவர்கள் அத்தனை பேரும் ஆழ்ந்த மதப்பற்று உடையவர்கள்; அரசியல் துறையிலே பெரும்பாலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. இப்படிப்பட்ட நிலையும் நினைப்பும் படைத்த போரா சமுதாயத்தவர்கள், இம் மாதம் பத்தாம் தேதியன்று, அவர்களுடைய குலகுருவுக்குச் சென்னையில் ஒரு தேநீர் விருந்தை அளித்திருக்கிறார்கள். அந்தத் தேநீர் விருந்திலே அன்பர் ஆச்சாரியாரும் கலந்துகொண்டு விருந்தை அருந்திய பிறகு விரிவுரை ஒன்றும் ஆற்றியிருக்கிறார். அந்த விரிவுரையைக் கண்டபோதுதான் நம் மனக்கண்முன்னால் கன்னக்கோல் கந்தப்பனும், வக்கீல் தொழில் வரதராஜ அய்யங்காரும், பிச்சையெடுக்கும் நாராயணசாமியும், பிரபல டாக்டர் திகம்பரசாமியும் தோன்றலாயினர்.
"போரா வகுப்பைச் சேர்ந்த நீங்கள் பிரபல வணிகர்களாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் உங்களுடைய வாணிபத்தைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டுமென்பதே என்னுடைய ஆசை. நீங்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டாம். அது உங்களுக்கு அவசியமில்லை" — துள்ளியோடும் புள்ளிமான்களை வேட்டையாடிக் கொன்று தின்றுவிட்டு, புலி ஜீவகாருண்யம் பேசினால் அந்தப் பேச்சை ஆச்சாரியார் பேச்சுக்கு ஒப்பிடலாம்! அறிவுரை கூறியிருக்கிறார் போரா வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு.
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அரசியலிலேயே கழித்துவிட்டவர் ஆச்சாரியார். வயது எழுபதுக்குமேல் ஓடியும் கூட அரசியலை விட்டுத் துறக்க மனமில்லாமல் அரசியல் வட்டாரத்துக்குள்ளேயே வளைய வளைய வந்துகொண்டிருப்பவர் ஆச்சாரியார். கவர்னர் ஜெனரல் என்கிற மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர்கள் அப்படி இருந்தபிறகு எத்தகைய அரசியலிலும் நுழையக்கூடாது என்கிற அரசியல் சம்பிரதாயத்தையும் மீறி, வேண்டுமென்றே அரசியலில் மீண்டும் நுழைந்து சித்துகள் பலவற்றை விளையாடி வரும் விசித்திரபுருஷர் ஆச்சாரியார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகத் தன்னுடைய உள்ளத்தை, உணர்ச்சிகளை, அறிவை, திறமையை, அத்தனையையும் அரசியல் உலகுக்கே அர்ப்பணித்துவிட்டவர் ஆச்சாரியார். அரசியல் உலகில் நெடுங்காலமாகப் பவணி வந்துகொண்டிருப்பவர் மட்டுமல்லர் அவர், அரசியல் உலகில் உலவுவதால் என்னென்ன ருசியையும் பசையையும் காண இயலுமோ அவ்வளவையும் அனுபவித்து முதிர்ந்த அரசியல் பழம் ஆச்சாரியார்.
வெள்ளை ஏகாதிபத்ய எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் பூமாலை, பாராட்டு, புகழ், செல்வாக்கு இவ்வளவும் கிடைத்தன அவருக்கு. சுயராஜ்ய தர்பார் நடைபெற்று வரும் இந்தக் காலத்திலோ, மத்திய சர்க்காரில் இரண்டு முறை மந்திரிப்பதவி, வங்காள மாகாணத்தில் ஒருமுறை கவர்னர் பதவி, அகில இந்தியாவுக்கும் ஒரு முறை கவர்னர் ஜெனரல் பதவி, கடைசியாக இப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவி ஆகிய இவ்வளவு இலாபங்களும் கிடைத்திருக்கின்றன அன்பர் ஆச்சாரியாருக்கு.
பட்டம், பதவி, புகழ், பணம், வசதிகள் நிரம்பிய வாழ்க்கை ஆகிய இவைகளிலே ஏதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றை மட்டுமோ அல்லது எல்லாவற்றையுமோ பெறவேண்டுமென்பதுதான் எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடிய மிக அதிகமான ஆசையாக இருக்கமுடியும். ஆச்சாரியார் இவை அத்தனையையும் பெற்றிருக்கிறார் — அவர் நம் அரசியல்வாதியாக இருந்துவரும் காரணத்தால்! சென்ற நாற்பது ஆண்டுகளாக அரசியலிலே ஈடுபட்டு, அப்படி ஈடுபட்ட காரணத்தால் பெயரும் புகழும் பட்டமும் பதவியும் வேண்டியமட்டும் பெற்று அநுபவித்த ஆச்சாரியார், மற்ற மனிதர்களைப் பார்த்து, "அரசியலில் ஈடுபடாதீர்கள் — அது தேவையில்லாத காரியம்" என்று கூறுகிறார். இது நாணயமான பேச்சாக இருக்க முடியுமா? நேர்மையுள்ள பேச்சாக எடுத்துக்கொள்ள முடியுமா நாம்?
அரசியல் என்பது உண்மையிலேயே நாட்டுக்குத் தேவையில்லாத ஒரு துறை என்பது ஆச்சாரியாரின் எண்ணமாக இருக்குமானால், அவர் ஏன் இன்னமும் அரசியல் உலகிலேயே உழன்றுகொண்டிருக்கிறார்? அவர் அரசியல் உலகிலிருந்து வெளியேறிவிட்டு, அரசியல் துறைக்கே ஒரு கடைசி விடை கொடுத்துவிட்டு, அதற்கு அப்புறம், "அரசியல் என்பது தேவையற்ற ஒரு காரியம்" என்று பேசுவாரானால், அந்தப் பேச்சிலே நாணயம் இருக்க முடியும். ஆனால் இப்போதோ அவர் ஓர் அதிதீவிர அரசியல்வாதியாக இருந்துவருகிறார். இப்படி இருந்துகொண்டே அவர் "அரசியல் என்பது தேவையற்ற காரியம்" என்று வாய்கூசாமல் கூறுகிறார். பிச்சைக் கிண்ணியைக் கையிலேந்திக்கொண்டே நாராயணசாமி மற்றவர்களைப் பார்த்துப் பிச்சையெடுப்பது மகா பாவம் என்று கூறியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? டாக்டர் தொழில்மூலம் ஏராளமாகப் பணம் சேர்த்து வரும் திகம்பரசாமி, அப்படிப் பணம் சேர்த்துவரும் காரியத்தைச் சிறிதளவுகூட தளர்த்தாமலே "டாக்டர் தொழிலா — ஐயையோ அது அக்கிரமமான தொழிலாயிற்றே" என்று அலறுவதற்கும், ஆச்சாரியாரின் பேச்சுக்கும் என்ன மாறுபாடு இருக்கிறது?
பிச்சைக்கார நாராயணன், கன்னக்கோல் கந்தப்பன், பிரபல டாக்டர் திகம்பரசாமி, வழக்கறிஞர் வரதராஜர் இவர்களுடைய நிலையிலேதான் ஆச்சாரியார் இருக்கிறார் என்று நாம் கூறினால் ஆச்சாரியார் நம்முடன் சண்டைக்கு வரக்கூடும். ஆகவே ஆச்சாரியாரே கூறட்டும் — அவருடைய பேச்சு மேலே நாம் குறிப்பிட்டுள்ள இவர்களுடைய பேச்சுக்களைப் போலவே இருக்கின்றதா, இல்லையா? என்ன அர்த்தம் ஆச்சாரியாருடைய பேச்சுக்கு? அரசியல் என்பது எனக்கு மட்டும்தான் சொந்தம், உங்களுக்கெல்லாம் அதிலே பங்கில்லை என்று அர்த்தமா? அரசியல் உலகிலே கிடைக்கக்கூடிய பட்டம், பதவி முதலிய இலாபங்களையெல்லாம் நானேதான் அனுபவித்தாக வேண்டும், வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்று அர்த்தமா? அரசியல் என்பது ஆச்சாரியாருடைய வர்க்கத்துக்கு மட்டும்தான் ஏகபோக உரிமை, இஸ்லாமிய இனத்தவருக்கு அந்த உரிமை இல்லை என்று அர்த்தமா? எந்த அர்த்தத்திலே ஆச்சாரியார், இஸ்லாமிய இனத்தவர்களைப் பார்த்து "நீங்களெல்லாம் அரசியலில் நுழையக்கூடாது" என்று கூறியிருக்கிறார்? எந்தப் பொருளிலே ஆச்சாரியார் அன்றையதினம் சொற்பொழிவாற்றியிருந்தாலும் சரி, அவருடைய பேச்சை நாணயமானது என்று யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
"ஒவ்வொரு மதமும் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று சிற்சில கோட்பாடுகளை வகுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் மக்கள் அப்படியே பின்பற்றி நடப்பார்களானால் அந்தந்த சமூகம் மட்டுமல்ல, நாடு பூராவுமே சந்தோஷமாக வாழமுடியும். ஆனால் சில மக்கள் அவரவர்களுடைய மதம் வகுத்துள்ள முறைப்படி நடந்துகொள்வதில்லை. அதனால்தான் உலகில் பற்பல சிக்கல்களும் உண்டாயிருக்கின்றன" — அதே கூட்டத்தில் ஆச்சாரியார் நமக்கெல்லாம் அளித்திருக்கிற மற்றொரு அறிவுரை இது!
ஒவ்வொரு மனிதனும் தன் தன் மதம் விதித்துள்ள கட்டளைப்படியேதான் காரியமாற்ற வேண்டுமாம்! அப்படிக் காரியமாற்றாத காரணத்தால்தான் உலகிலே இன்றையதினம் பற்பல சிக்கல்களும் ஏற்பட்டுவிட்டனவாம்! கூறுகிறார் ஆச்சாரியார் இப்படியெல்லாம்! அப்படியானால் ஆச்சாரியார் மட்டும் ஏன், இந்துமதம் அவருக்கும் அவருடைய இனத்தவருக்கும் விதித்துள்ள கட்டளையை மீறி நடந்துவருகிறார்?
வேதம் ஓதுவது, பஜகோவிந்தம் பாடுவது, ஆண்டவனை வழிபடுவது, யாகம் நடத்துவது, கடுந்தவம் புரிவது, கானகத்தில் வாழ்வது, உலக பந்தங்களை வெறுப்பது, முழுத்துறவியாக வாழ்வது, லௌகீக விவகாரங்களில் மனத்தைப் பறிகொடாமல் ஒவ்வொரு விநாடியையும் ஆண்டவனைப் பற்றிய நினைப்பிலேயே செலவழிப்பது — இதுதானே இந்துமதம் பிராமண இனத்தவருக்கென்று வகுத்துக் கொடுத்துள்ள பாதை? ஆச்சாரியார் இந்தப் பாதை வழியாகவா நடந்து வருகிறார்? கவர்னராகவும், கவர்னர் ஜெனரலாகவும், மத்திய மந்திரியாகவும், மாகாணப் பிரதமராகவுமல்லவா தன்னுடைய வாழ்நாளை வீண் நாளாக்கி வருகிறார்? "உலக விவகாரங்களில் ஈடுபடாதே — ஆண்டவனைப் பற்றியே விநாடிதோறும் எண்ணமிடு" — இந்து மதம் இப்படிக் கட்டளையிடுகிறது ஆச்சாரியாருக்கு. ஆனால் ஆச்சாரியாரோ ஓயாமல் உலக விவகாரங்களில்தான் ஈடுபட்டுவருகிறார். இன்றைய தினம் வரையில்கூட அவர், திரு ஓடு ஏந்திக்கொண்டு, திருக்காஷாயம் தரித்துக்கொண்டு, சந்நியாசகோலம் பூண்டதாகத் தெரியவில்லை. இவர் மட்டும் மதக் கட்டளையை மீறலாம், மற்றவர்கள் தான் மீறக்கூடாதா?
இவர், தன்னுடைய மதக்கட்டளையை மீறுவதால் உலகத்தில் சிக்கல் எதுவும் ஏற்பட்டுவிடாது, மற்றவர்கள் மீறினால்தான் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? மதக் கட்டளைப்படி நடவுங்கள், அப்படி நடந்தால்தான் உலகில் ஆநந்தம் அரசோச்சும் என்று இஸ்லாமியர்களைப் பார்த்து அறிவுரை கூறுகிறாரே ஆச்சாரியார், அதே அறிவுரையை ஏன் அவர் பிராமண இனத்தவரைப் பார்த்துக் கூறவில்லை? உணவுப் பொருளை விலைக்கு விற்பது மகா பாவம் என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் பிராமணத் தோழர்களோ ஊருக்கு ஊர் 'ஓட்டல்' வைத்து நடத்துகிறார்கள். அதாவது மதக் கட்டளையை மீறுகிறார்கள். ஏன் இதைக் கண்டிக்கவில்லை ஆச்சாரியார்? இஸ்லாமிய இனத்தவருக்கு ஒரு நீதி, இவருடைய இனத்தவருக்கு மற்றொரு நீதியா?
- ராஜிய விவகாரங்களில் நுழையாதீங்கோ!
- மதம் இடுகின்ற கட்டளைப்படி வாழ்க்கையை நடத்துங்கோ!
மற்றவர்களுக்குக் கூறுகிறார் ஆச்சாரியார் இந்த இரட்டை உபதேசத்தை! ஆனால் இவரோ இந்த உபதேசத்திற்கு நேர்மாறாக நடந்து வருகிறார். நியாயமா?
படிப்பது இராமாயணம் — இடிப்பது பெருமாள் கோயிலையா? பேசுவது ஜீவகாருண்யம் — உண்பது கெண்டை மீனையா? நடிப்பது அஹிம்சாவாதியாக — நடத்துவது தடியடி தர்பாரா? ஒரு மாகாணத்தின் பிரதமர் என்கிற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி ஊருக்கு உபதேசியாக இருக்கலாமா, இருக்கலாமா?
"கடலைத் தாண்டாதே — தாண்டுவது குற்றம்!" என்கிறது இந்துமதம். ஆனால் பிராமண இனத்தவரிலோ பலர், பற்பலர், இலண்டன் சென்று, ஐ.சி.எஸ். பட்டம் பெற்று, இங்கே திரும்பிவந்து கலெக்டர்களாகவும் சர்க்கார் அதிகாரிகளாகவும் கொலுவீற்றிருக்கின்றனர். இதை ஏன் இன்றளவும் எதிர்த்துப் பேசிக் குற்றம் கூறவில்லை ஆச்சாரியார்?
உலக பந்தயங்களை விடு! காவி காஷாயத்தைக் கையிலெடு! என்கிறது இந்து மதம். ஆனால் பிராமண இனத்தவரோ, சந்நியாச கோலமா — சீ — அதை விடு, கோட்டும் சூட்டும் கையிலெடு என்று கூறிவருகின்றனர். ஏன் இதை மகாபாவமான நடத்தை என்று கண்டிக்கவில்லை ஆச்சாரியார்?
