மேற்கண்ட இலக்கியப்பிரதிகளிளெல்லாம் சாமானியர்களின் அனுபவங்களானவைப் பாடுபொருட்களாகப்
பதிவாக்கப்படவேயில்லை என்பதும் கண்கூடு. ஆக, இக்காலகட்டத்தை ஆராயும் பட்சத்தில் இலக்கிய
வாசிப்பும் புலமையும் என கல்விசார்ந்த அனைத்துமே மேல்தட்டு வர்க்கத்தினரிடம் கைவசம்
இருந்துள்ளதையே மேற்கண்ட சான்றுகள் நமக்கு
உணர்த்துகின்றன.
ஆனால், இப்போக்கானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மாற்றியமைக்கப்பட்டது.
அதற்குக் காரணங்களாக ‘நவீன இலக்கியம்’ (யுஎயவெ புயசனந) எனும் புதிய அணுகுமுறை அறிமுகமானது.
இவ்வணுகுமுறை இயல்புகளாக ஏற்பட்ட புரட்சியும் (தொழில் புரட்சி, பசுமைப் புரட்சி) உற்பத்திப்
பெருக்கங்களும் அமைந்தன. குறிப்பாக, புதிய புதிய நாடுகளைக் கண்டடைந்து, அவற்றின்வழி,
சந்தைகளை உருவாக்கி, ஆட்சியமைப்பது என்ற ‘நிலவுடைமை முறை’ இல்லாமலாகி, ‘முதலாளித்துவச்
சிந்தானா முறை’ தோற்றுவிக்கப்பட்டமை, இக்காலச் சூழலில்தான் இச்சிந்தான முறைமை இந்திய
மற்றும் தமிழகச் சூழலில் நிலவிவந்த கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், சமூகம் ஆகியவற்றில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தவகையில், இந்திய மற்றும் தமிழகத்தில் ஆங்கிலேயர்களின்
ஆட்சிமுறை நிலைப்பொறத் தொடங்கியதால் மரபான கல்விமுறையை நீக்கி, நவீனக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், நவீன மருத்துவம், அச்சு இயந்திரத்தின் வருகை போன்றவற்றால் கலை, இலக்கியவடிவம்
‘உரைநடை’ எனும் புதிய இலக்கியவகைமையில் பொருத்திக் கொள்ளத் தொடங்கியது. இவ்வுரைநடை
இலக்கியவடிவமானது, சாமானியர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் ‘வெகுஜன வாசிப்பு’ பழக்கத்தையும்
தோற்றுவித்தது. இதன் தொடச்சியாக, மதம் பரப்பும் பொருட்டு வந்த பாதிரிமார்கள் பதிப்புப்
பணியை மேற்கொள்ளுதல், அகராதி தயார்செய்தல், மொழிபெயர்ப்;பு முயற்சிகள் செய்தல் என்று
புதிய புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள், நவீன இலக்கியத்தின் இயல்புகளாகவும்
தற்காலத் தேவையாகவும் இந்திய மற்றும் தமிழிலக்கியச் சூழலின் வளர்ச்சி நிலைகளுக்கு ஒரு
மையில் கல்லாகவும் அமைந்தன.
இதற்குப் பின்னர்தான் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கப் புள்ளியாக கருதப்படும்
‘பாரதியார்’ தம் ‘வசன கவிதை’ மூலம் படைப்புகளை அறிமுகம் செய்தார். பாரதி தன் படைப்புகளின்
வழி மரபு சார்ந்த மதிப்பீடுகளை நீக்கி, தற்காலத் தேவைக்கேற்ப புதிய மப்பீடுகளைக் கட்டமைத்தார்.
இம்மதிப்பீடுகள் அதுவரை தமிழில் நிலவி வந்த மரபுசார்ந்த சமூகப்படிநிலைகளை நோக்கிச்
கேள்வி எழுப்பவும், பகடி செய்யவுமாக அமைந்தன. பாரதிக்குப்பின் நவீனத் தமிழ் இலக்கியத்தின்
முன்னோடியாகத் திகழ்ந்தவர் ‘புதுமைப்பித்தன்’ ஆவார். அதற்குக் காரணம், புதுமைப்பித்தன்
தன் படைப்பிலக்கியங்கள் மூலம் மரபுசார்ந்த புராணங்களையும் தொன்மங்களையும் மறுவாசிப்பு
செய்து நடப்புகால நிகழ்வுகளுடன் மோதவிட்டும், விவாதங்கள் மூலம் புதிய கதைகளை உருவாக்;கியும்,
யதார்த்தவாதக் கதைகளைத் தோற்றுவித்த முயற்சியில்
வெற்றி பெற்று இருந்தமையேயாம். இந்த வகையில் ‘பாரதியும்’ ‘புதுமைப்பித்தனும்’ நவீன
தமிழ் இலக்கியத்தின் இரு மூதாதையர்கள் என்று கொள்ளப்பட்டநிலை துலக்கமாகிறது. ஏனெனில், இவர்கள் இருவரும் தமிழ் மரபை அறிந்து அதனை
முறையாக உள்வாங்கி, தம் படைப்புகளில் அம்‘மரபை மறுகட்டுமானம்’ செய்தார்கள். இவர்களுக்குப்
பின் பெரும் தொடர்ச்சியாகவே, எழுந்து நவீன தமிழ் இலக்கியச் சூழலை முன்னுக்கு நகர்த்திய
பெருமை கு.ப.ராஜகோபாலன், மௌனி, லா.ச.ராமாமிர்தம், க.நா.சுப்ரமண்யம் தொட்டு, சி.சு.செல்லப்பா,
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, நகுலன், அசோகமித்திரன், ப.சிங்காரம்
என்று தொடர்ந்து இன்று வரை அது நீளவும் செய்கிறது.
நவீன தமிழ்ப்படைப்பிலக்கியப் போக்கில் பாரதிக்குப் பின் யார்? என்ற வினா ஒரு
சூழலில் எழும்பத்தொடங்கியது. அதற்குக் காரணம், 1950-களில் இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில்
அசாதாரணமான போக்கு நிலவியது. இப்போக்கால் புதிய புதிய அரசியல் மற்றும் இலக்கிய இயக்கங்கள்
தோன்றி ‘கலை - இலக்கியத்தில்’ பெரும் பாதிப்பை நிகழ்த்தின. ஆனால், இதே காலகட்டத்தில்
தான் நவீன தமிழ் படைப்பிலக்கியத்தினை எவ்வித அரசியல் மற்றும் இலக்கிய இயக்கங்களுக்கும்
ஆட்படாமல் அவற்றுக்கு அப்பாற்பட்டு நின்று, ஆரியம் - திராவிடம் எனும் வாதங்களையும்
புறந்தள்ளி ‘கலை கலைக்காகவே’ எனும் நோக்கோடு செயலாற்றிட்ட ‘க.நா.சுப்பரமண்யம்’ எனும்
பெருத்ததோர் ஆளுமைப் புறப்பட்டார்.
க.நா.சு. தன் சிறுகதைக்குப் பின்ணணியாக, ஆதாரமாகக் கூறும் போது “நான் நேரில்
பார்த்ததையும், பார்த்ததைப் பற்றி சிந்திப்பதையும் விரிவாக ஒரு… பைத்தியக்காரனின் பிதற்றல்கள்
போல் இருக்கும்” என்கிறார். மேலும், க.நா.சு தம் கதைக் குறித்து கூறுமிடத்து, “கதையில்
வரும் ஒவ்வொரு விசயத்துக்கும் உண்மையில், வாழ்க்கையில் ஆதாரம் உண்டு. இந்த சம்பவங்களெல்லாம்
வாழ்க்கையில் ஒருவர் சம்பத்தப்பட்டு நடந்தவை அல்ல, பல இடங்களில், பல சமயங்களில் பல
பேர்வழிகள் சம்பந்தமாக நடந்தவற்றின் சேர்க்கை” என்று கதை அமைவிற்கு விளக்கம் அளிக்கிறார்.
மேலும், க.நா.சு சிறுகதை எழுதுவற்கான காரணங்களாக
கூறுமிடத்து, “உணர்ச்சியுள்ள ஒவ்வொரு மனிதனும் சுமார் இருநூறு அல்லது முந்நூறு நல்ல
சிறுகதைகள் எழுத முடியும். பார்க்க கண்ணும், சிந்திக்க மனமும், எழுதுவதில் ஒரு லாவகமும்
உள்ளவர்கள் எல்லாரும் நல்ல கதைகள் எழுதிவிடலாம். சிலர் பல காரணங்களால் எழுதுகிறார்கள்.
சிலர் எழுதுவதில்லை. அவ்வளவுதான்.” என மற்றவர்களையும் எழுதத்தூண்டுகிறார் இவர். மேலும், க.நா.சு. தன் சிறுகதையை 1943ல் தொடங்கி 1986 வரை
மொத்தம் 64 கதைகளைப் புனைந்தளித்துள்ளார். இக்கதைகள் அனைத்தும் ‘சமூக எதார்த்த நிகழ்வுகளாளே’
கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பம்சமாகும்.
க.நாசு.வின் படைப்புருவாக்கத்தில் நாவல் இலக்கியம் முக்கியப்பங்கை வகுக்கிறது.
அந்தவகையில், இவரின் முதல் நாவலான சர்மாவின் உயில்(1948) தொடங்கி, சமூக சித்திரம்,
ஏழுபேர், பெரிய மனிதன், வாழ்ந்தவர் கெட்டால், அவரவர் பாடு, பட்டணத்துப் பேச்சு, மாதவி,
ஒரு நாள், அசுரகணம், ஆட்கொல்லி, தந்தையும்
மகளும், பொய்த்தேவு, கோதை சிரித்தாள் (தமிழக அரசு பரிசு பெற்றது), நளினி, பித்தப் பூ,
தாமஸ் வந்தார், அவதூதர்(1988) வரையில் காணக்கிடைகிறது.
இப்படைபுகளானவை, ஒவ்வொன்றும் அந்தந்த கால உலக, இந்திய, தமிழிலக்கியப் போக்கை வாசகர்
நுகரும் வகையில் படைத்தளித்துள்ளார்.
க.நா.சு தன் கவிதைகளை ‘மயன்’ எனும் புனைப் பெயரில் வெளியிட்டுள்ளார். இதற்கு
காரணத்தை நோக்கும் பட்சத்தில், தன் சிறுகதைத்
தொகுப்பில் உள்ள ‘தெய்வ ஜனம்’ எனும் முதல் கதையில் காணக்கிடைக்கிறது. இந்தத் தொன்ம
கதைப் பாத்திரமானது, க.நா.சு.வின் மூதாதையர் என்ற விருப்பத்தின் அடிப்படையில், க.நா.சு
‘மயன் கவிதைகள்’ எனும் புனைப் பெயரை தன் கவிதைக்குச் சூட்டியுள்ளார்.
க.நா.சு.வை தமிழ் நவீன படைப்பிலகிகியச் சூழலில் அறிமுகம் செய்யும் பலரும் ‘சிறந்த
விமர்சகர்’ என்பதற்கு இதுவே காரணம். ‘தமிழ் நவீன இலக்கியம்’ எவ்வாறு அமையவேண்டும் என்பதை
தம் கட்டுரை மூலமும் கலகக் குரல் வாயிலாகவும் தொடர்ந்து வற்புறுத்தியவர் க.நா.சு. அவற்றில்
குறிப்பிடத்தகுந்த கட்டுரை பின் வருமாறு,
விமரிசனக்
கலை, இலக்கிய விசாரம், நாவல் கலை, பாரதியின் காட்சிகள், தமிழின் முதல், ஐந்து நாவல்கள்,
இந்திய சிந்தனை வளம், இலக்கியத்திறன், இலக்கியத்திற்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதமி
விருதுபெற்றது), பத்து இந்திய நாவல்கள், இந்திய மரபு போன்ற கட்டுரைத் தொகுப்புகள்
மூலம் நவீன தமிழ் இலக்கியத்தை வடிவமைத்தார்.
க.நா.சு. தீவிரமான விமர்சகர் மட்டுமள்ளாமல்,
சாதாரண தமிழ் ஜனங்களுக்கு உலஇலக்கியப் போக்கைக் கொண்டு செல்ல முற்பட்டார். அதன் பொருட்டே
தம்மை நிலைநிறுத்திக் கொள்ளவும் ‘வெகுஜன ஆதிக்கங்’ கொண்ட அக்காலத்து பத்திரிக்கைகளான
‘விகடன்’, ‘சுதேசிமித்திரன்’, ‘இமயம்’, ‘சத்தி ஜோதி’ ஆகியவற்றில் எழுதிவந்தார். அத்துடன்,
மிகத் தீவிர இலக்கிய இதழ்களாக வெளிவந்து கொண்டிருந்த கு.ப.ராஜகோபலனின் ‘கிராம ஊழியன்’,
சாலிவாஹனனின் ‘காலமோஹினி’, கு.அழகிரிசாமியின் ‘சக்திகோவிந்தனின் மலர்கள்’, எம்.வி.வெங்கட்ராமின்
‘தேனி’, திருலோகசீத்தாராமனின் ‘சிவாஜி’ போன்ற இதழ்களில் க.நா.சு.வின் படைப்புகள் பிரசுரமாயின. மேலும், க.நா.சு.
சுயமாக ‘சந்திரோதயம்’ எனும் பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
க.நா.சு. ‘சந்திரோதயம்’ இதழுக்கு முன்னதாகவே, தமிழ்ச் சிறுகதைகளுக்கு முன்னோடியாகத்
திகழ்ந்த ‘மணிக்கொடியில்’ இவரின் பல கதைகள் வெளிவந்து கொண்டிருந்தது என்பதை வாசிப்பின்
வழி அறியமுடிகிறது. பின்னும் தளராமல் க.நா.சு. ‘சூறாவளி’ எனும் தீவிர இலக்கிய ஏட்டை
தொடங்கினார். இதனால், க.நா.சு. தம் சொத்தில் பெரும் பங்கை இழக்கநேரிட்டது. குறிப்பிடத்தக்க
விசயம் என்னவென்றால், இதே காலத்தில் எழுத்துலகில் இருந்த புமைப்பித்தனும், பி.எஸ்.ராமையாவும்
தமிழ் இலக்கிய உலகில் நிலவிய மந்தமான போக்கிலிருந்து பிழைத்துக் கொள்ள திரைப்படத் துறைக்காகக்
காத்திருந்தனர். ஆனால், க.நா.சு.வோ தொடர்ந்து கம்யூனிச பத்திரிக்கையான ‘சரஸ்வதி’ இதழிலும்
எழுதிவந்தார். க.நா.சு.வின் இச்செயல்பாடுகள் நவீன தமிழ் இலக்கியத்தின் இடைவெளியை இட்டுநிரப்பும்
முயற்சியாகக் கருதப்படுகிறது.
இவ்வகையில், தமிழ் நவீன படைப்பிலக்கியத்தில் ‘கலை - இலக்கியமானது’ தனிமனித வாழ்வின்
கனவு, கலாச்சாரம், அர்த்தங்கள், நுண்மைகள், அறங்கள், மாறுபட்ட சாத்தியங்கள், இவற்றுடன்
சார்ந்தியங்கும் ஒரு உலகமாகும். இந்த கலை - இலக்கியத்தின் அடிப்படைகளுக்கெல்லாம் மூலாதாரமாக
‘படைப்பாளி’ விளங்குகிறான். இவ்விதத்தில் க.நா.சு ஒருவர் மாத்திரமே நாவல், சிறுகதை,
கவிதை, விமரிசனக் கட்டுரை, சிறுபத்திரிகை, நாடகம், மொழிபெயர்ப்பு என்னும் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் தன் முழு மனதுடன்
அவர் படைப்பை நமக்கு அளித்துள்ளார். ஆக, க.நா.சு தம் வாழ்நாள் முழுவதுமான 76-ஆண்டு
காலத்தில் பெரும் பகுதியை இலக்கியப் பணிக்காக அர்பணித்துள்ளார். மேலும், க.நா.சு இலக்கியத்திலிருந்து
சம்பாதித்தவை சொர்பமே. இருந்தபோதிலும், ஒரு படைப்பாளியாக தமிழ் நவீன இலக்கியத்தை க.நா.சு
முழுமையுமாக வடிவமைத்துதந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று என்பதை இவரின்
படைப்பு முயற்சி நமக்கு உறுதிப்படுத்துகிறது.