மீள்பதிப்புக் குறிப்பு:

        இந்தியப் பிரிவினைக்குப் பிந்தைய 1948-ஆம் காலகட்டத்து வரலாற்று எதார்த்தங்களையும், அரசியல் பரப்புரைகளின் விளைவுகளையும் மிகத் துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு அரிய வரலாற்று ஆவணப் பதிவு. 1948-இல் வெளியான 'ஆஸாத்' இதழில் இடம்பெற்ற இக்கட்டுரை, திருச்சியைச் சேர்ந்த தபால் தந்தித் துறை பணியாளர் நண்பர் S. R. பாக்ஷா அவர்கள் அன்றைய அரசியல் சூழலில் பாகிஸ்தான் சென்று, அங்கு 5 மாதங்கள் தங்கித் தான் நேரில் கண்ட அனுபவங்களையும், ஏமாற்றங்களையும் ஒளிவுமறைவின்றி விளக்குகிறது. கால ஓட்டத்தில் ஆவணக் காப்பகங்களில் முடங்கிப் போகக்கூடிய இத்தகைய அரிய வரலாற்றுச் சான்றுகளையும் சமகாலப் பதிவுகளையும் இன்றைய இணையத் தலைமுறையினர் படித்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ளும் நோக்கோடும், சமூக, அரசியல் மற்றும் கல்வி ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன். இது சுதந்திர இந்தியாவின் தொடக்க கால மக்கள் இடப்பெயர்வுச் சிக்கல்களையும் சமூகப் பின்னணியையும் ஆராய உதவும் ஒரு சிறந்த வரலாற்று இலக்கிய ஆவணமாகும்.

ஓர் மாதம் கூட சரியாக ஆகாது. அதற்குள் மாஜிஸ்டிரேட் வந்து உடனே வீடு காலி செய்ய சொல்லுவார். விஷயம் என்னவென்று கேட்டால் என்னைப்போல் ஒர் சிப்பந்தி நின்று கொண்டிருப்பார். அவர் சொல்லுவார், நான் மாஜிஸ்டிரேட்டிடம் ரூ. 100 கொடுத்திருக்கிறேன், என்று. அந்த ரூ.100-ஐ அடைந்ததால் இப்
போது அவர் அந்த சிப்பந்திக்கு வீடு கொடுக்க வேண்டுமல்லவா? ஆதலால் என்னைப்போல் ஏழை ஆசாமிகள் தானே கிடைப்பர். நம்மை வந்து வீடு காலி செய்ய வேண்டும் என்பார். அப்போது நாம் ஒன்றும் பேசக்கூடாது. பேசி விட்டாலோ நம்மிடம் இருக்கும் படுக்கையும், பெட்டியும் வெளியே சென்றுவிடும். அவருடைய சப்ராஸியின் வலது கை நம் கழுத்தின் மீது இருக்கும். எதற்காக? கல்தா கொடுப்பதற்காக.
இவ்வாறே லஞ்சம் அதிகமாக அதிகமாக நம்மைப் போலுள்ள ஏழைகளின் கதி அதோகதிதான் இது நம் திருச்சியிலிருக்கும் முஸ்லிம் தோழர்களிடம் கூறினால் 'நீர் ஏன் அங்கு சென்றீர்' என்று நம்மைக்கேட்கின்றனர். 'உன்னை யார் அழைத்தனர்' என்று கொழும்புவிலிருந்து வரும் 'இஸ்லாமிய தாரகைக்' கேட்கின்றது.
நான் அந்த 'இஸ்லாமிய தாரகை'யை கேட்கின்றேன். பாகிஸ்தான் என்றும் ஹிந்துஸ்தான் என்றும் பிரிந்ததற்குப் பிறகு என்னைப்போன்ற உத்தியோகஸ்தர்களை எங்கு சேவை செய்கின்றாய் என்று கேட்டதின் மர்மம் என்னவென்று? மைனாரிட்டிகளை காப்பாற்ற என்பது உண்மைதானே. நாம் அங்கு சென்றதில் தப்பிதம் என்ன? சென்ற பிறகு கண்டதென்ன? ஏமாற்றம் மைனாரிட்டிகளை காப்பாற்ற அல்ல. மைனாரிட்டிகளை நசுக்க.
என் அருமைத் தோழர்களே இன்னும் கேட்கின்றனர். நீ ஹிந்துஸ்தானிலிருந்துகொண்டே பாகிஸ்தானிற்கு சேவை செய் என்று. இதனால் அவர்களுடைய புத்தியின்மையை பாருங்கள் இருக்க வேண்டியது ஹிந்துஸ்தானிலாம் சேவை செய்ய வேண்டியது பாகிஸ்தானிற்காம். ஏன்? 5-ம் படையினராக வேலை செய்ய வேண்டுமாம். தேசத்துரோகம் செய்ய வேண்டுமாம்.
என்னைப் போல் ஏழைகள் சென்றதற்கு பலவிதமாக கேலி செய்கின்றனர். ஜனாப் ஜின்னா சாஹிப் பம்பாயைவிட்டு சென்று விட்டாரே! அதற்கு என்ன பதில்? ஏன்? ஜின்னா சாஹிபுக்கு மாத்திரம் கொம்பா முளைத்திருக்கிறது. அப்படி ஒன்றும் இல்லையே. அவர் ஹிந்துஸ்தானிலிருந்துகொண்டே ஹிந்துஸ்தானில் வாழும் முஸ்லிம் மைனாரிட்டிகளைக் காப்பாற்றியிருக்கலாமே. என்றவுடன் பதவி ஆசையோ? ஓர் வேளை இருக்கலாம். அல்லது ஹிந்துஸ்தானில் அவருடைய பருப்பு இனிப் பலிக்காது என்றா? அதுவும் இருக்கலாம்.
பஞ்சாபில் (Cost of living) வாழ்க்கை நடத்தும் செலவுகளைப்பற்றி எழுதினாலோ, அப்பப்பா எழுதவே முடியாது. நம்மைப் போன்ற ஏழை அகதிகளுக்கு ஓர் தனி விலை. அதாவது இரட்டிப்பு. முதலில் அங்கு ஒன்றும் கிடைப்பதில்லை. (கோதுமை, அரிசியைத் தவிர) இரண்டாவது கருப்பு மார்க்கெட் சிவகாசி எங்கிருக்கின்றது. லாகூர் எங்கிருக்கின்றது. சிவகாசியில் செய்யப்படும் ஓர் நெருப்புப் பெட்டி லாகூரில் 2 அணாவிற்கு விற்கப்படுகின்றன. ஆனால் அதற்குக்கண்ட்ரோல் விலை ஒரு அணாதான். இதை பகிரங்கமாக 2 அணா என்று "அனார் கலி" (பெரிய பஜாரில்)யில் விற்கின்றனர். (Players) பிளேயர்ஸ் சிகரெட் பாக்கெட் ஒன்றிற்கு ரூ. 1-2-0. பிறகு சாப்பாடு கிடைப்பது அரிது. கிடைக்கக்கூடியது என்னவென்றால் ரொட்டியும் மாமிசமும் தான். அதுவும் மாட்டு மாமிசம். 2 ரொட்டிகள், 1 பிளேட் சால்னா 1 டீ குடித்து எவ்வளவு என்று கணக்குக்கேட்டால் ரூ.1-10-0 என்பான். ஒன்றும் பேசாமல் அதைக் கொடுத்துவிட வேண்டும். மாதத்திற்கு என்ன ஆகின்றது. கொஞ்சம் பாருங்கள் சகோதரர்களே. என்னைப்போல் ஏழை அங்கு வாழ முடியுமா என்று.
லாகூரில் அதுவும் டவுனில் ஓர் ஹிந்துவோ, அல்லது ஒர் சீக்கியனோ மருந்துக்கும் கிடையாது. இதை எவராலும் மறுக்கமுடியாது.
படிப்பு விஷயமோ சொல்ல முடியாது என்னுடைய ஸூபர்வைசர் (Supervisor) என்னை எங்கிருந்து வந்தாய் என்று கேட்டார். மதறாஸ் மாகாணத்திலிருந்து என்றேன். அதற்கு அவர் (ரூ. 250 சம்பளம் வாங்கக் கூடிய ஆபீஸர்) மதறாஸ் மாகாணம் பாகிஸ்தானில் சேர்ந்துள்ளதா என்றார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. என்ன சொல்ல வேண்டுமென்றே தெரியவில்லை. நான் அங்கு புதியவன். ஆதலால் மற்றொன்றும் பேசாமல் அது ஹிந்துஸ்தானில் உள்ளது என்றேன்.
மற்றொரு சமயம் என் சிநேகிதருடன் இம்பீரியல் பாங்குக்கு சென்றிருந்தேன். அங்கு என் சிநேகிதர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார். ஏனெனில் பஞ்சாபில் பேசப்படும் பாஷையானது முக்கால் பங்கு பஞ்சாபி சேர்ந்த உர்து ஆகும். அது நமக்கு சரியாக விளங்காது. அதற்கு அந்த குமாஸ்தா நேரிடையாக தமக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது உர்துவில் பேசுங்கள் என்றான். அதற்கு என் சிநேகிதர் உர்துவில் (கொச்சையல்ல இலக்கணந்தான்) பேசினார். அதற்கு அவன் பஞ்சாபியில் விளங்கவில்லை என்று கூறினான்.
இது இங்கு கூறக் காரணம் என்னவென்று கேட்டால் ஜின்னா சாயபு இஸ்லாமிய மதம், பாஷை, எல்லாம் ஒன்று என்றார். இதை நாம் நம்பினோம். அங்கு போய் பார்த்தால் பஞ்சாபில் பஞ்சாப் பாஷை வேண்டும் என்கின்றனர். சிந்துவில் சிந்தி பாஷை எல்லை மாகாணத்தில் புஸ்து பாஷை, கிழக்கு வங்காளத்தில் வங்காளம் வேண்டும் என்கின்றனர். இப்போது பாஷை ஒன்று என்று கூறிய ஜின்னா, வாய் மூடிக்கொண்டிருக்கின்றார்.
பஞ்சாப் அசெம்பளியில் மாகாண பாஷை உர்து ஆக்க வேண்டுமென்று கொண்டுவந்த தீர்மானத்தில் கலாட்டா நடந்தது நேயர்களுக்கு ஞாபகம் இருக்கும். பஞ்சாபிகளுக்கு உர்து தெரியாது என்று நான் மட்டும் கூறவில்லை லாகூரிலிருந்து வெளிவரும் "அதகார்" என்னும் வாரப் பத்திரிகை எழுதுகின்றதே. அதற்கு என்ன கூறுகின்றீர்கள் தோழர்களே.
மக்களுடைய குணமோ, முதல்தர முரட்டு சுபாவம். உதாரணமாக பக்ரீத் பண்டிகையன்று இரவு முஸ்லிம்களாக மாறின (Converted) இரு சீக்கியர்கள் நான் இருந்த கேம்பிற்கு பின்னால் கழுத்தை அறுத்துப் பிரேதங்களை ரோட்டின் ஓரத்தில் போட்டு விட்டனர் காலையில் ஜனங்கள் நடமாடினர் போலீஸ் சிப்பந்திகளும் சென்றனர். ஒருவரும் அந்த பிரேதங்களைப்பற்றி சரியாக விசாரிக்கவில்லை. விசாரித்தனர். அந்த பிணம் முஸ்லிமா அல்லது முஸ்லிம் அல்லாதாருடைய பிணமா என்று போதும்! முஸ்லிம் அல்லாதார் என்று சொன்னவுடன் "குப்பார் மர்கயா" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஓர் முஸ்லிமைக் கொன்று பிரேதத்தை என் ஆபீஸ் காம்பவுண்டிற்குள் போட்டிருந்தனர். இத்தனைக்கும் என் ஆபீஸின் நாற்புறமும் இரவும் பகலும் போலீஸ் பாரா உண்டு. அடுத்த நாட் காலையில் சூப்பிரண்டெண்டெண்ட் போலீஸை வரவழைத்து அந்த பிரேதத்தை வெளியேற்றினார். போலீஸ் வருவதற்கு முன் அந்த பிரேதத்தின் மகன் வந்து பார்த்தான். பார்த்து நானும் ஒரு முஸ்லிம். என் தகப்பனும் ஓர் முஸ்லிம். இதுதானா பாகிஸ்தான், பாகிஸ்தானில் முஸ்லிமை முஸ்லிம் கொல்லும் காலம் வந்துவிட்டதா என்று அலறினான் அதைப் பார்த்திருந்தால் இங்கிருந்து கொண்டு ஜம்பமாகப் பேசும் தோழர்களுக்கு அவ்வாறு பேச நாக்கு எழும்பாதப்பனே.
மற்றொரு உதாரணம் பாரப்பா. இது நான் இருந்த வீட்டில் நடந்தது. நான் ஷௌதி கடி (Shaudhi Ghadi) என்னும் இடத்தில் மற்றும் 3 தோழர்களுடன் மேல் மாடியில் வசித்து வந்தேன். ஓர் நாள் மாடியின் படியில் என் தோழர்களில் ஒருவர் கூட்டிக் கொண்டிருந்தார். அப்போது தூசி கிளம் பிற்று போலும். அதற்கு அருகிலிருந்த போலீஸ்காரன் பஞ்சாபியில் ஏதோ சொல்லியிருக்கிறான். அது என் சிநேகிதருக்குப் புரியவில்லை. அதற்குள் அந்த போலீஸ்காரன் கையும் துப்பாக்கியுமாக வந்து அந்த சிநேகிதரின் மீது குறிபார்த்தான். அதற்குள் சிநேகிதர் அந்த போலீஸ்காரனைப் பார்த்ததும் உள்ளே ஓடி வந்து விட்டார் விஷயம் என்னவென்று கேட்க, அவர் முழுவதும் கூறினார். பிறகு நான் பயந்து கொண்டே கீழே இறங்கிச் சென்று சமாதானம் சொல்லி அனுப்பினேன். ஏது? இரண்டு அல்லது மூன்று நிமிஷங்களில் என் சிநேகிதர் அவனைப் பார்க்காமல் நின்றிருந்தால் கொன்று விட்டிருப்பான் போலும்!
தோழர்களே ! என் சிநேகிதரின் குற்றம் என்ன? அதற்கு கொடுக்கவிருந்த தண்டனை என்ன? இது ஓர் புத்தியுள்ள மனிதனின் செய்கையா? அல்லது ஒரு பைத்தியக்காரன் செய்கையா என்றுதான் கேட்கிறேன். இது அல்பமான காரியம் என்று தள்ளி விடாதீர்கள். இது பஞ்சாப் மக்களின் அறிவின்மையை குறிக்கின்றதல்லவா !
பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லுகின்றனர். மேற்குப் பஞ்சாபின் தலைநகரான லாகூரில் தாஸிகள் இருக்கின்றார்கள். அதுவும் முஸ்லிம் தாஸிகள். மாலை 6 மணியானவுடன் மேக் அப்' செய்து கொண்டு "ஹீரா மண்டி"யில் (அவர்களுடைய ஹெட் குவார்டர்) மாடிகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனரே! இது தான் இஸ்லாமிய நாடா? இவர்களை விரட்டக் கூடிய தைரியம் கூட பாகிஸ்தான் அரசாங்கத்திற்கில்லையா? இல்லை ஏன்? இவர்கள் அங்கு இல்லாவிட்டால் தாபார் நடத்த முடியாதல்லவா.
லாகிரி வஸ்துக்களைப்பற்றி கேட்டாலோ 100க்கு 75 பேர் அவ்வஸ்துக்களை உபயோகிக்கின்றனர். லாகூரில் உள்ள "லண்டே பஜாருக்கு " சென்று விட்டால் அபினி கடைகளும், கஞ்சா கடைகளும் சுமார் 200 க்கு மேல் இருப்பதைக் காணலாம். கள், சாராயம் அங்கு கிடையாது. ஆனால் அந்நிய நாட்டு பானங்களான பீர், விஸ்கி, பிராந்தியை ஒவ்வொரு மனிதனும் உபயோகிக்கின்றனர். குரானில் எதுவெல்லாம் பாபம் என்று சொல்லப்பட்டிருக்கின்றதோ அவை யெல்லாம் பாகிஸ்தானில் நடனமாடுவதைப் பார்க்கலாம். அங்குள்ள மக்கள் கொலை செய்வதற்கோ அஞ்சவில்லை தலை வேறு முண்டம் வேறாக செய்து விடுகின்றனர்.
இது போன்ற இன்னும் அநேக கொடூரமான, தவறான, நியாயமற்ற விஷயங்கள் பாகிஸ்தானில் உள்ளன. இந்திய டொமினியனிலுள்ள பாமர முஸ்லிம்களை தவறான நம்பிக்கையில் வைத்துக் கொண்டிருக்க பாகிஸ்தான் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் வாங்கியாய்விட்டது.இனியும் இல்லாததையெல்லாம் சொல்லி பாகிஸ்தான் வண்டவாளத்தை உள்ளது உள்ளபடியே முஸ்லிம்கள் அறியாதபடி செய்வதைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. இஸ்லாமிய நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் லட்சணத்தை இன்று அநேக முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டனர் இன்னும் நாட்கள் செல்லச் செல்ல எல்லோரும் அறிந்து கொள்வீர்களாக!
— S. R. பாக்ஷா,
(பாகிஸ்தான் சென்று திரும்பி வந்தவர்).