மீள்பதிப்புக் குறிப்பு:இந்தியத் துணைக்கண்டத்தின் நீண்ட கால வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு ஆட்சி மாற்றங்களையும், அரசியல் விவாதங்களையும் அன்றைய சுயமரியாதை இயக்கப் பார்வையில் காரசாரமாகப் பட்டியலிடும் ஒரு அரிய வரலாற்று இதழியல் பதிவு இது. 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 4 தேதியிட்ட 'முரசொலி' இதழில் 'தூக்கிலிட வேண்டும்' என்ற தலைப்பில் என். எஸ். இளங்கோ அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை, பண்டைய நந்தர் காலம் முதல் மராட்டிய, மைசூர் மற்றும் நாயக்கர் ஆட்சிக்காலம் வரை நிகழ்ந்ததாகக் கருதப்படும் வரலாற்றுச் சதிகளையும், அதற்குப் பின்னணியில் இருந்த சமூகக் கட்டமைப்புகள் குறித்தும் அன்றைய காலகட்டத்தில் எழுந்த தீவிரமான விமர்சனங்களை விவரிக்கிறது. கடந்த நூற்றாண்டுத் தமிழகத்தின் அரசியல், இதழியல் போக்குகளையும், சமூக மாற்றத்திற்கான விவாதங்களையும் இன்றைய இணையத் தலைமுறையினர் நடுநிலையோடு படித்துத் தெரிந்துகொள்ளும் நோக்கோடும், முற்றிலும் வரலாற்று ஆவணப் பணிக்காகவும் இக்கட்டுரையை இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
📜 தூக்கிலிட வேண்டும்.
(N.S. இளங்கோ)
நவநந்தர் ஆட்சியைக் கெடுக்க அலெக்ஸாண்டரை அழைத்து வந்த சாணக்கியன்.
கிளைவ் பிரபுக்கு பிளாசி யுத்தத்திலே ஸுராஜ் உத்தௌலாவைக் காட்டிக்கொடுத்த உமர்சந்த்.
போர்த்துக்கீசியருக்கு கள்ளிக்கோட்டையில் கைலாகு கொடுத்து வரவேற்பு வழங்கிய ஜமீன்தார் ஜாமோரின்.
மலைக்கோட்டை மாவீரன் சிவாஜியின் மனக்கோட்டையைத் தூள்படுத்திய கங்குபட்டன்.
திருச்சி மீனாட்சியின் ஆட்சிப் பெருமையை நாசமாக்கிய நாராயணன்.
தஞ்சை நாயக்கர் வம்சத்தை மைசூர் ராசர்களிடம் காட்டிக்கொடுக்க சதிசெய்த கோவிந்த தீக்ஷிதன்.
தஞ்சை நாயக்க இளவரசன் செங்கமல தாசன் முடியைப்பறித்து மராட்டிய வெங்காஜியின் காலடியில் வைத்த வெங்கண்ணன்.
திப்பு சுல்தானின் சாம்ராஜ்யத்தின் சரிவுக்குச் சதி புரிந்த பூர்ணய்யா.
இவர்கள் மட்டுமல்ல.
பௌத்தரின் நளந்தா கலாசாலைக்கு நெருப்பு வைத்தவர்கள்;— விஜய சொக்கலிங்கன் ஆட்சிக் காலத்தில் அவர்களை வீழ்த்த நரிவேலை நடத்திய மூவர் — இவர்களுங்கூட உத்தம கோத்திரமான பிராமண கோத்திரத்தில் பிறந்தவர்கள் தான்.
இந்த துரோகிகளின் பொம்மைகள் விடுதலை விழாவன்று தூக்கிலிடப்படும் காட்சி நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் மார்பிலே துவண்ட பூணூல் கயிறு தூக்குக் கயிறைவிட பலம் பொருந்தியது — ஆகவே விடுதலை விழாவில் இந்த வைபவம் நடைபெறவில்லை.