கலித்தொகையும் தற்காலக் காதல் 'ஈகோ'வும்!
ஊடுதல்
காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி
முயங்கப் பெறின்.
சந்திரமுகி திரைப்படத்தில் அந்த அரண்மனையையும் சந்திரமுகி
அறையையும் பார்க்கும் பொழுது, திரு.ரஜினிகாந்த் “அடடா! இரசிகன் டா!!” என்று சொல்லி
இருப்பார். மாளிகையை இரசித்த ரஜினையை விட, வாழ்க்கையின் இன்றையமையாத பக்கமான இல்லறத்தை
இரசித்த வள்ளுவனின் வாய்மொழி தான் மேலே கண்ட திருக்குறள்.
வடிவேலு பாணியில் சொல்வதானால், ”சண்டையிலே கிழியாத சட்டை
எங்கயிருக்கு”….
அதுபோல புருஷன் பொண்டாட்டி சண்டை இல்லாத குடும்பம் எங்கே
இருக்கின்றது. ஆனாலும் குடும்பத்தில் மன்னிப்புக் கேட்பவனர் தலைவனாகவும், மன்னிப்புக்
கொடுப்பவர் மனைவியாகவுமே இருக்கின்றனர். மன்னிப்புக் கேட்பவன் மனிதன்; மன்னிப்புக்
கொடுப்பவன் பெரிய மனிதன். ஆக, ஒரு குடும்பத்தில் கணவன் மனிதன்; மனைவி பெரிய மனிதன்.(நான்
என் வீட்டிலே அடி வாங்காம இருக்கணும்லப்பா!! எப்பூடி)
மன்னிப்பு!, தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை என்னும்
திரு.விஜயகாந்த் வசனம்லா பேசுறவங்க கண்டிப்பாகக் கல்யாணம் இன்னும் ஆகலண்ணு ஜோசியம்
பாக்காமயே சொல்லிப்புடலாம். ஆனால் மன்னிப்பு கேட்கும் விதம் தான் முக்கியமானது…
பொதுவாக, பழந்தமிழ் இலக்கியத்தில் 'ஊடல்' என்று சொல்லப்படும்
தற்காலிகக் கோபமும் பிடிவாதமும்தான், இன்றைய காலகட்டத்தில் காதலர்களிடையும், கணவந்மனைவி
இடையேயும் 'ஈகோ' (Ego) என்று அழைக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலித்தொகைப்
பாடல்களில் இன்றைய காதலர்களின் ஈகோ பிரச்சினைகள் மிக அழகாகப் பேசப்பட்டுள்ளன.
குறிஞ்சிக்கலியின் 53-ஆவது பாடல் என்ன சொல்லுதுணு பாருங்க…..
கணவன் தான் செய்த தவறுக்காக(தவறே செய்யலனாலும்) மனைவியிடம் காலில் விழுந்து மன்னிப்புக்
கேட்கின்றான்.
"அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும்,
நோய்
தீர்க்கும் மருந்து நீ ஆகுதலான்!"
"அங்க பாருடி! நம்ம தலைவன் வராரு. நீ பயங்கரக் கடுப்புல
இருக்கறதப் பாத்துட்டு மனுஷனுக்கு நெஞ்சுல பயம் வந்துருச்சு போல, அங்கேயே 'ஸ்டக்' ஆகி
நிக்கறாரு!"
"வரட்டும் வரட்டும்... இன்னைக்கு அவரோட ஈகோவை சுக்குநூறா
உடைக்காம விடமாட்டேன்."
”ரொம்ப சீன் காட்டாதடி! உன்னோட கோவமான முகத்தைப் பாத்துட்டு,
அவரு வேற வழியே இல்லாம உன்னோட கால்ல விழுந்து கெஞ்சப் போறாரு! ஏன்னா, அவரோட இந்த சண்டைக்கு
உன்னோட கால்ல விழுந்து 'சரண்டர்' ஆகுறதத் தவிர வேற ஆப்ஷனே இல்லயாம்!"
அப்படி என்னா பண்ணிட்டானாம்! அது வேறொன்றும் இல்லை….. சும்மா
ஃபெரெண்ட பார்த்து, கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, படுத்து எந்திருச்சு வாராணாம்.
ஓஒ… இது என்ன பெரிய தேசத் துரோகக் குற்றமா? இதுக்கா கால்ல
விழுந்து மன்னிப்பு கேட்கணும்… அடியாத்தி என்ன இப்படிப் பெரிய கொடுமைக்காரியா இருப்பா
போல……. சண்டாளி மக…..
ஹேய்! அதெல்லாம். சரி. முழுசா கேளு. அந்த ஃபெரெண்ட் கேர்ள்
ஃபெரண்டாம்.
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்… உள்ள இருக்குமாம் ஈறும்
பேணுமாம்….. இந்த ஆப்பச்சட்டித் தலையனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வாங்கட்டும்!
வாங்கட்டும்!!
------------------------------------------
வேற்றுப்
பெண்ணிடம் சென்றுவிட்டு விடியற்காலையில் வரும் தலைவன், மாட்டிக்கொண்டதும் தலைவியின்
காலில் விழுகிறான். அதற்குத் தலைவி கொடுக்கும் மரணக் கவுண்டர் பதில் மருதக் கலி:69
"விருப்புற்றுத் தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது...
நின் நலம் பாராட்டி வந்தாரை நக்கனை விடுப்பாயோ?"
(தலைவன்
மெதுவாக பூனை போல வீட்டுக்குள் நுழைய, நிலைமை 'டேஞ்சர்' என்று புரிந்ததும் உடனடியாகத்
தலைவியின் காலில் விழுந்து 'நெகிழ்ச்சி' மோடிற்கு மாறுகிறான்!)
"என்னை
மன்னிச்சிருடி என் செல்லக்குட்டி! இனிமே உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்.
ப்ளீஸ்... டிரஸ்ட் மீ (Trust me)!"
"ஆஹா...
என்ன ஒரு பெர்ஃபார்மன்ஸ்! என் கால்ல விழுந்து அப்படியே ரொம்பப் பாசக்காரப் புள்ளை மாதிரி
நீ சீன் போடுறதப் பாத்தா எனக்கு என்ன தோணுது தெரியுமா? நேத்து நைட்டு உன்னோட புது ஆளப்
பாக்கப் போனியே... அவ உன்னை 'கெட் அவுட்' சொல்லி கழுத்தைப் பிடிச்சு துரத்தி அடிச்சிட்டா!
அங்க 'பல்பு' வாங்கிட்டு, ஓடி வந்து என்கிட்ட டிராமா பண்ணி என் கால்ல விழுந்துட்டு
இருக்க! அவகிட்ட உன்னோட இந்த வித்தையெல்லாம் வேலைக்காகல போலயே?"
"அய்யோ...
இவ எப்படிக் கரெக்டா கண்டுபிடிச்சுடுறா! நம்ம ஈகோ இங்க சுத்தமா டேமேஜ் ஆகிடுச்சே!"
சங்க
காலத்திலும் சரி, இந்த டிஜிட்டல் உலகத்திலும் சரி, தம்பதிகளிடையே சண்டை வரும்போது ஆண்கள்
தங்கள் ஈகோவை விட்டுவிட்டு 'சரண்டர்' ஆவதும், பெண்கள் அதை இன்னும் கொஞ்சம் 'ரோஸ்ட்'
செய்து ரசிப்பதும் காதலின் மாறாத சுவாரசியங்கள் என்பதை இந்தக் கலித்தொகைப் பாடல்கள்
நிருபிக்கின்றன!
எங்க வீட்டுலலா….. அவ என்னட்ட பேசவே
மாட்டா!!
ஏன்ன!ரூம்ல கூட்டுப் போயி, “அவ என்னை அடிக்க….. என்ன அவ அடிக்கணு”
மாறிமாறி விழும்.
.jpg)