
"படம்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வப் 'பகவா த்வஜ்' சின்னம். (கல்வி, வரலாற்று ஆவணம் மற்றும் விமர்சன ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது)."
மீள்பதிவுக்கான காரணம் :
வரலாற்று ஆவணங்களை மீள்பதிப்பு செய்வது என்பது வெறுமனே பழைய எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் வேலை அல்ல; அது ஒரு சமூகத்தின் சிந்தனைப் பரிணாமத்தை உற்றுநோக்கும் ஆய்வுப் பணியாகும். தந்தை பெரியார் குறிப்பிட்டது போல, "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு." அந்த அறிவைச் கூர்மையாக்க, கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களையும், முற்போக்கு வெளிச்சங்களையும் நாம் சமமாக ஆராய வேண்டும்.
ஸமபங்க்தி போஜனம் ஸரியா!?
ஆதாரம் : ஆர்ய_தர்மம்_ஆடி_20_1933
சென்ற 31-7-32 சென்னையில் ஆர்ய ஸமாஜத்தார் ஒரு ஸமபந்தி போஜன விருந்து நடத்தினார்கள் என்பது பிரியவாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த விருந்திற்குப் பிராமணர், பிராம்மணரல்லாதார், ஆதித் திராவிடர், மிலேச்சர், மேனாட்டினர் முதலிய யாவரும் ஜாதிபேதமின்றி வந்திருந்தனராம். அவ்விருந்து சாப்பாட்டுக்கு வந்த விருந்தினரெல்லோரும் முந்தியே அணா 6- கொடுத்து டிக்கட்டு பெற்றுக்கொண்டனராம். அப்படிப்பட்ட விருந்தில் ஒரு விசேஷமுண்டு. அதாவது தென்னிந்திய மரக்கரி போஜனம் அளிக்கப்பட்டதாம்.
31-7-32 ஆகிய அந்த புண்ய தினத்திலேயே நம் தேசத்திலுள்ள ஜாதிபேதங்களைப் போக்குவதின் பொருட்டு மதுரையிலுங்கூட சுயமரியாதை சங்க ஆதரவில் ஒரு ஸமபந்தி போஜன விருந்து நடந்ததாம். ஆனால் அவ்விருந்து சாப்பாட்டு டிக்கட்டு அணா நான்குதான். இவ் விருந்திலும், இவர்களபிப்பிராயப் பிரகாரமாக ஜாதி, மதகக்க்ஷி, வித்தியாஸமின்றி எல்லோருங் கலந்துகொண்டனராம்.
இப்படிப்பட்ட விருந்துபோஜனங்களில், மகரிஷி குலத்திலuதித்த பிராம்மணர்களுங் கலந்துகொண்டார்களே! அது நியாயமா என்றுதான் நான் வருத்தப்படுகிறேன். சுயமாகவே புத்திமான்களாகிய பிராம்மணர்களே, மேனாட்டு நாகரீகத்தில் மயக்கமுற்று, மேனாட்டு ஆகாரமுறையைப் பின்பற்றுவார்களானால் மற்ற ஹிந்துக்களிடம் குற்றமென்னவிருக்கிறது.
ஹிந்துக்களின் ஆகார முறையில் ஏதாவது குற்றமுண்டா? அப்படிப்பட்ட விருந்தில் கலந்துகொள்வதால் ஏதாவது ஸௌகரியமுண்டா? இதனால் ஸ்வராஜ்யம் கிடைக்கும் என்பதும் கனவுமாத்திரந்தான் என்பதில் ஐயமில்லை. நாம் நமது தர்ம மார்க்கத்தை பிடிவாதத்துடன் பரிபாலித்து வருவோமானால் ஸ்வாராज்யம் ஆயாஸமில்லாமலே ஸித்தித்துவிடும். இப்படிப்பட்ட அக்கிரமங்களைப் புத்திக்குத் தோன்றியவாறு செய்வதால் ஸ்வராஜ்யம் கிடைக்காமல் போவதுமன்றி, அனேக அனர்த்தங்களும் அடையும்படி நேரிடும். அந்தோ! நமது ஆர்யர்களின் மோஹத்தை என்னென்று வர்ணிப்பது? ஸ்வாராஜ்யத்திற்கு ஆசைப்பட்டுக்கொண்டு அதன் காரணத்தைக் கண்டுங்கேட்டுங்கூட அதனை அலக்ஷ்யம் செய்துவிட்டு ஸ்வாராஜ்ய நாசகாரணங்களைப் பின்பற்றுவது எவ்வளவு அறியாமை? இந்த சமயத்தில் ஸ்ரீமஹாபாரதத்திலுள்ள சில வசனம் ஞாபகத்திற்கு வருகின்றது.
नियतस्त्वं नरव्याघ्र शृणु सर्वमशेषतः ।
यथा राज्यं समुत्पन्नमादौ कृतयुगेऽभवन् ।।
नैव राज्यं नराजाधीन्न दण्डो न च दाण्डिकः।
धर्मेणैव प्रजास्सर्व रक्षन्तिस्म परस्परम् ।।
என்பதாதிகளால் மோஹவசமாக ஏற்பட்ட
"ஸமபந்திபோஜனம்" முதலிய காரியங்களால் ஸ்வாராஜ்ய நாசந்தானேற்படுமென்று ஸ்பஷ்டமாய்
அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இக்காலத்திய நவீன ஸமாஜத்தார்களிடம் சாஸ்தி சர்ச்சை செய்வது
மிகவும் உசிதமில்லை. நிற்க.
இவ்வாறே ஹிந்துக்களாகிய நமக்குள் ராசத்வேஷாதிகள் அபிவிருத்தியடைந்திருப்பதற்கு ஜாதி
மதாசார பேதமொருக்காலும் காரணமாகாது. அப்படியே கலிகாலமென்பதும் ஸரியன்று. பகவத் ஸங்கல்ப்பம்
என்பது அழகல்ல. பின்னை நம்மிடமுள்ள தோஷந்தான் காரணமென்பதுதானுசிதம். ஆகவே சங்கத்தார்
எல்லோரும் தம்மிடமுள்ள குற்றங்களையல்லவா முதலில் விலக்குவதற்குப் பாடுபடவேண்டும். அவாவர்கள்
தம் குற்றங்களை விலக்கிக்கொண்டால் ராகத்துвеஷம் நம்மிடம் எப்படியணுகும் ஜாதிபேதம் முதலியவற்றை
ஒழித்துவிட்டாலும் நம்மிடமிருந்து மாகத்வேஷம் அகன்றுவிடுமா? ஒற்றுமையும் உண்மையாக ஏற்பட்டுவிடுமா?
ஆத்ம குணங்களை ஸம்பாதித்தாலன்றி ஒருபோதும் ராகத்வேஷங்கள் விலகமாட்டாது. அதன்மூலமேற்படவேண்டிய
ஒற்றுமையும் அடையமுடியாது. ஆதலால் ஜாதிமத பேதங்களையொழித்துவிடவேண்டும் என்பது எப்படி
இவர்களுக்கு அழகாகும். இதனால் மதத்தின்மூலமாகத்தான் நாம் ஒற்றுமை அடைவது ஸாத்தியமாகும்
என்று நிச்சயமாய் ஏற்படுகின்றது.
ஆகவே ஸமபந்திபோஜன விருந்தால் எவ்விதம் ஸ்வாராஜ்யமோ, அல்லது ஒற்றுமையோ, மற்றுமுள்ள மனோரதமோ,
ஸித்திக்கக்கூடுமென்பது புறியவில்லை.
இதனால் நமக்குள் பாஸ்பாஸ்னேகம் அதிகரிக்குமென்பதும் ஸரியில்லை. ஸ்னேகம் கொஞ்சங்கூட
மனதில் வைத்துக்கொள்ளாமலே, சத்துருத்வத்தோடு கூடவே ஸமபந்தியில் போஜனம் செய்யக்கூடாதோ?
இத்தகைய அகாரியத்தைச் செய்தாவது நமக்கு ஸ்னேகம் எதற்காகவேண்டும், ஸன்மார்க்கத்தால்
அதனை அடையக்கூடாதோ? அவ்விதம் ஸ்னேகம் ஏற்பட்டாலும் நிஷ்பிரயோஜனமேயாகும்.
ஸமபந்திபோஜந விருந்துண்ணாதவர்களுக்கும் கூட தற்காலதில் ஸ்னேக ஸம்பந்தம்மட்டிலும் காணவில்லையா?
ஆகையால் சாப்பாட்டினால்தான் ஸ்னேகமுண்டாகவேண்டும் என்பது மூடத்தனம்.
தவிற இவ் விருந்தானது தர்மசாஸ்திரப்பிரகாரமாயும் நமது ஆயுர்வேதப் பிரகாரமாயும், நிந்திக்கத்தக்தே.
தர்மசாஸ்திரங்களில் இப்படிப்பட்ட ஆகாராதிகளால் தான் ஆரோக்யக் குறைவு, ஆயுள் குறைவு
முதலிய அனர்த்தங்களேற்படுவதாக விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ் வனர்த்தங்களையெல்லாம்
உத்தேசித்துத்தான் ஆகாரத்தின் குணம் அதைப் பரிசுத்தம் செய்யும் மந்திரங்கள், மனோபாவனை
முதலிய நியமானுஷ்டானத்துடன் ஆகாரத்தை உட்கொள்ளும்படி நமது சாஸ்திரங்கள் போதிக்கின்றன.
பசியை விலக்கிக்கொள்வதற்காகமட்டிலும் ஆகாரம் செய்யவேண்டுமென்று நமது சாஸ்திரங்களபிப்பிராயப்படவில்லை.
நம்முடைய ஆகாரம் அமுதவடிமாகி, மனதை சுத்திசெய்து சரீரத்திற்கு ஆரோக்ய ஸுகமளிப்பதற்காகப்
பல நியமங்களும், போஜன காலத்தில் உபயோகித்துவரும்படியல்லவா நமது சாஸ்திரம் கூறுகின்றது.
இப்படிப்பட்ட ஆகாரம்தான் அமிருதமென்பது அதுதான் ஒளஷதமுமாகும்.
நமது ஆகாரமுறைகளெல்லாம் மிகப்
பரிசுத்தமானவை. சரீரத்துக்கு ஆரோக்யமாயும், மனதிற்கு ஸமாதான ஜனகமாயும் அறிவிற்குக்
கூர்மையை அளிக்கக்கூடியதுமாகிய ஆகாரத்தைப் பகவானுக்கு அர்ப்பணஞ்செய்து நமக்கு நெருங்கின
விருந்தினர்களுடன்மட்டிலும் ஸ்வீகரித்துக்கொண்டு மகிழ்ச்சி பெறுவதுதான் மேலானது. ஆகார
வித்தியாஸத்தால் அவரவர் எண்ணங்களும் வித்தியாஸப்பட்டுவிடுவது வழக்கம். நம்முடைய ஆகாரங்கள்
நம் எண்ணங்களாலேயே அமிருதமாகவும், விஷமாகவும், மாறிவிடலாம். தாயார் கோபத்துடன் குழந்தைகளுக்குப்
பால் கொடுத்தால் அது அக்குழந்தைகளுக்கு மரணபரியந்தம் கொடுத்துவிடும் என்று பல ஆதாரங்களுமுண்டு.
ஒருவர் போஜனம் செய்யுங்காலத்தில் மற்றொருவர் அப் போஜனத்தைக் கெட்ட எண்ணத்துடன் பார்த்தால்
அதன்மூலமாக அவ்வாகாரத்தில் விஷ சக்தி யுதிக்கின்றது.
இதைத் தான் நாம் திருஷ்டி தோஷம் என்பது வழக்கம். இதனால்தான் சாப்பிடும்போது கெட்ட சிந்தனைகளும்
கெட்டவர்களின் ஸம்ஸர்கமும் கூடவே கூடாது என்று நம் முன்னோர்கள் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள்.
நமது புராதன ஆயுர்வேதத்திலுங்கூட இப்படிப்பட்ட போஜனத்தால் குஷ்டம் முதலிய தீரா நோய்களுத்பத்தியடைகின்றனவென்று
சொல்லப்பட்டிருக்கின்றது. பிளேக், தொத்துவியாதிகள் இவ் வுலகில் அதிகரிப்பதற்கு நீசர்களின்
காற்றுவாடையே போதுமென்றும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது என்று சரகத்திலும்
என்று ஸுச்ருதத்திலும் இப்படிப்பட்ட
விருந்து போஜனத்தால் அனேக தொத்துவியாதிகள்தான் ஜனங்களுக்கு ஸம்பவிக்குமேயன்றி ஆரோக்யம்
அணுவளவும் உண்டாகாது என்று ஸ்பஷ்டம்.
நமது ஆயுர்வேதத்திற்கும், தர்ம
சாஸ்திரத்திற்கும் விரோதம் ஒரு விஷயத்திலும் கிடையாது.
அதனால்தான்
आसनातच्छयनाद्यानात्संभाषात्सहभोजनात् ।
संक्रामन्ति हि पापानि तैलबिन्दुरिवांभस्ति ।।
என்று பல ஸ்மிருதி வசனங்களு மிக்காரியத்தைத்
தீயச்செயலென்று வர்ணிக்கின்றன.இவ்விதமிருக்க, ஏன்? நமது ஜன்மாவை இவ்வகாரியங்களால் வீணாக்கிக்கொள்ளவேண்டும்.
இதன்றி
மாம்சத்தையுமா அவ்விடத்து உட்கொள்ளவேண்டும். ஜீவகாருண்யம் அவச்யம் வேண்டுமென்னுமிச்சங்கத்தார்
எண்ணிறந்த ஜீவர்களை வதைசெய்து வயிற்றை நிரப்பி சரீரத்தைப் போஷிப்பது உசிதமானால் தமது
கடமையென்று யாகம் முதலிய புண்யகாரியங்களில் சில வைதிகர்களால் செய்யப்படும் ஜீவவதையைமட்டிலும்
நிந்திப்பானேன். அவர்கள் என்ன பாபம் செய்தார்கள். இவர்களுடைய ஜீவகாருண்யம் பிரஸங்கத்துடன்
நிற்கிறதேயன்றி காரியத்தில் மிருகவேட்டைதான் தினந்தோறும் நடைபெற்றுவருகின்றது. அந்தோ!
கால வித்தியாஸத்தால் மனிதர்களுக்கு மிருக குணங்களும், மிருகங்களுக்கு மனித குணமும்
விருத்தியடைகின்றதே? ரிஷிகள் மாம்ஸ ஆகாரம் எடுத்துக்கொள்ளவில்லையா? என்பது கேள்வியாகாது.
நீங்கள் ரிஷிகளா?
ஆதால்
ஆஸ்திகர்களே? ஆகார விஷயத்தில் நாமாவது ஜாக்கிரதையாக இருப்போம். விருந்திற்குப் போகிறவர்கள்
போகட்டும். அவர்களுடன் நாம் சேருவதுமனுசிதம். சேர்ந்தால் சேர்க்கைப் பாபம் நம்ம விடாது.
என்ன கதறினாலும் யார் கேட்கப்போகிறார்கள். இப்படிக் கதறுவதும் நமது கடமையென நினைத்துத்தான்
கொஞ்சமென்னுடைய அனுதாபத்தை வெளியிட்டேன். இக் காலத்தில் ஆஸ்திகர்களைத் தட்டி எழுப்புவது
மிகவும் அவசியம் என எனது தோற்றம்.